கடமைதான் என் முதல்காதல்… சொல்வது திரிஷா
திரிஷாவின் முதல்காதல் வேலைதானாம். அதனால்தான் காதலர் தினத்தன்று தனது காதலரும் வருங்கால கணவருமான வருண்மணியனுடன் கொண்டாடாமல் ஹைதராபாத்திற்கு படப்பிடிப்புக்கு போய்விட்டார்.
கேட்டால் கேமரா முன் நிற்பதுதான் என்னுடைய கடமை... என் பணியை நான் காதலிக்கிறேன் எனவேதான் படப்பிடிப்பு தினத்தன்று நடிக்க வந்துள்ளேன் என்கிறார்.

புதுமணப்பெண்
நடிகை த்ரிஷா தனது நீண்ட நாள் நண்பரும் தொழிலதிபருமான வருண் மணியனை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது.

படப்பிடிப்பில் பிஸி
இந்த ஆண்டு இறுதியில் வருண்மணியன் - த்ரிஷா திருமணம் நடைபெறலாம் என எதிர்பார்க்கும் நிலையில் த்ரிஷா தற்போது அப்பாடக்கர், போகி, லயன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

காதலர் தினம்
திருமண நிச்சயதார்த்ததிற்கு பின்வரும் முதல் 'காதலர் தினம்' என்பதால் கடந்த 14ஆம் தேதி காதலர் தினத்தை திரிஷா எப்படி வித்தியாசமாக கொண்டாட போகிறார் என்பதை அறிய அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தனர்.

ரொமான்ஸ் காட்சியில்
அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற 'லயன்' படத்தின் படப்பிடிப்பில் பாலகிருஷ்ணாவுடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்துக்கொண்டிருந்தார் திரிஷா.

கடமைதான் காதல்
காதலர் தினத்தை கொண்டாடாமல் படப்பிடிப்பிற்கு வருவது குறித்து திரிஷாவின் ஒருசிலர் கேட்டபோது, 'ஏற்கனவே இந்த தேதியில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டதால் படப்பிடிப்பிற்கு வந்துள்ளதாகவும், தனக்கு வேலைதான் முக்கியம் என்றும், கேமராவின் முன் நிற்பதுதான் என்னுடைய காதலர் தின கொண்டாட்டம்' என்றும் திரிஷா கூறினாராம்.

உற்சாக திரிஷா
சமீபத்தில் அஜீத்துடன் நடித்த 'என்னை அறிந்தால்' பட வெற்றி திரிஷாவை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் பூலோகம் படத்தின் மீதும் அவர் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











