ஷூட்டிங் ஸ்பாட்டில் அம்மா ராதா இருந்தால் நடிப்பு வராது: கார்த்திகா
சென்னை: ஷூட்டிங் ஸ்பாட்டில் அம்மா தன்னை பார்த்துக் கொண்டிருந்தால் நடிக்க வராது என்று கார்த்திகா தெரிவித்துள்ளார்.
ராதா தனது பாணியில் தனது மகள்கள் கார்த்திகா, துளசி ஆகியோரை நடிகையாக்கிவிட்டார். இருவரும் தற்போது நடிப்பில் பிசியாக உள்ளனர். கார்த்திகாவுக்கு தமிழில் கோ படம் பெயர் வாங்கிக் கொடுத்தது. அடுத்து அவர் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கும் அன்னக்கொடி கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நடிகைகள் ஷூட்டிங்கிற்கு வந்தால் அம்மாமார்கள் உடன் வருவதுண்டு. ஆனால் கார்த்திகா விஷயத்தில் உல்டாவாக நடக்கிறது. இது குறித்து கார்த்திகாவிடம் கேட்டோம். அவர் என்ன பதில் கூறினார் என்று பார்ப்போம்.

அம்மா பார்த்தா நடிப்பு வராது
ஷூட்டிங் ஸ்பாட்டில் அம்மா தன்னை பார்த்துக் கொண்டிருந்தால் தனக்கு நடிக்க வராது என்றார் கார்த்திகா.

காதல் காட்சிகள்
அம்மாவுக்கு முன்னால் காதல் காட்சிகளில் நடிப்பது தன்னால் முடியவே முடியாது என்று கார்த்திகா தெரிவித்துள்ளார்.

வந்தாலும் பார்க்க மாட்டார்
அப்படியே அம்மா ஷூட்டிங்கிற்கு வந்தாலும் தான் நடிக்கும் பக்கமே வர மாட்டார் என்று கார்த்திகா கூறினார்.


Click it and Unblock the Notifications











