“கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது”.. காதல் முறிவு பற்றி முதன்முறையாக விஜய் ஹீரோயின் பேச்சு!

இனி தனது வாழ்வில் காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.

Recommended Video

காதலர் புகைப்படத்தை நீக்கிய : Ileana- வீடியோ

சென்னை: காதல் முறிவு குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் நடிகை இலியானா டிகுரூஸ்.

தமிழில் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்தவர் இலியானா. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நடித்துள்ள பாகல்பந்தி இந்தி படம் இம்மாதம் வெளியாக உள்ளது.

நடிகை இலியானாவும் ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் ஆண்ட்ருவும் நீண்டநாட்களாக காதலித்து வந்தனர். ஒருநாள் திடீரென இருவரும் பிரேக்கப் செய்துவிட்டனர். அதன் பிறகு ஆண்ட்ருவின் புகைப்படங்கள் அனைத்தையும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இருந்து இலியானா நீக்கிவிட்டார்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

காதல் முறிவால் கடும் மனஅழுத்தத்திற்கு இலியானா ஆளானார். இதனால் தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி வந்துவிட்டதாக சமீபத்தில் அவர் அறிவித்தார். மேலும் தீராத மனக்குழப்பத்திற்கும் அவர் தள்ளப்பட்டார்.

இலியானா ஓப்பன் டாக்

இலியானா ஓப்பன் டாக்

இந்நிலையில் ஆண்ட்ரு உடனான காதல் மற்றும் பிரேக்கப் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு இலியானா முதல் முறையாக மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். அதில் இனி தனது வாழ்வில் காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இனி காதலிக்க மாட்டேன்

இனி காதலிக்க மாட்டேன்

இதுகுறித்து மேலும் அவர், "இனிமேல் யாரையும் காதலிக்க நான் தயாராக இல்லை. இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என்னையே நான் காதலிக்க துவங்கிவிட்டேன். என் வாழ்க்கை முறையை மாற்றி புதிய வழியில் வாழப்போகிறேன்.

அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்

அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்

ஒவ்வொருவரும் தங்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். என் மீது நான் அக்கறை எடுத்துக்கொள்ள ஆரம்பித்த பிறகு தான் என்னிடம் பெரிய மாற்றத்தை உணர்ந்தேன். மனதளவில் மட்டுமல்ல உடலளவிலும், உள் உணர்விலும் கூட நிறைய மாற்றங்களை உணர்ந்தேன்

கெட்ட நேரம் வரும் போது

கெட்ட நேரம் வரும் போது

உங்களுக்கு கெட்ட நேரம் வரும் போது, உங்களை பற்றி தான் நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டும். மற்றவர்களை நம்பி எந்த பயனும் இல்லை. உங்களை தான் நீங்கள் நம்ப வேண்டும். மற்றவர்கள் தரும் அன்பு வார்த்தைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மனநல மருத்துவர் என்னிடம் கூறினார்.

காதலின் கஷ்டம்

காதலின் கஷ்டம்

காதலில் இருப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில நேரம் மற்றவர்களை நம்ப வேண்டி வரும். அந்த நேரத்தில் அவர்கள் மீது சார்ந்து இருக்க நினைப்போம்.

யோசிக்க வேண்டும்

யோசிக்க வேண்டும்

ஆனால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் நம்மோடு இருப்பார்களா? என்பது தெரியாது. நாம் மட்டும் மனப்பூர்வமாகவும், கண்மூடித்தனமாகவும் நம்பி அவர்களை அனுசரிப்போம். அப்படி இருக்க கூடாது. நம்மை பற்றி அதிகம் யோசிக்க வேண்டும்.

காதலருக்கு வாழ்த்து

காதலருக்கு வாழ்த்து

என் முன்னாள் காதலரைப் பற்றி தவறாகப் பேசவோ விமர்சிக்கவோ மாட்டேன். நான் இப்போது நல்ல இடத்திலிருக்கிறேன். அவருக்கும் எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று இலியானா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X