கோமா நிலையில் பிரபல நடிகை..உயிரை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள்!

பிரபல நடிகை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க நடிகையான அந்த்ரிலா ஷர்மா, 'ஜுமுர்'என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் திரையில் அறிமுகமானார். பெங்காலி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான முகங்களில் அந்த்ரிலாவும் ஒருவர்.

இவர் ஜிபோன் ஜோதி, ஜியோன் கதி மற்றும் பிற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இவர் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.

நடிகை அந்த்ரிலா ஷர்மா

நடிகை அந்த்ரிலா ஷர்மா

நடிகை அந்த்ரிலா ஷர்மாவுக்கு ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இரண்டு முறை சிகிச்சை பெற்று அதிலிருந்து குணமடைந்தார். தற்போது மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அந்த்ரிலாவுக்கு பக்கவாத நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து உடல்நிலை மோசம்

தொடர்ந்து உடல்நிலை மோசம்

ஹவுராவில் உள்ள மருத்துவமனையில் அந்த்ரிலா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் உடல் நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாமல் தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. அந்த்ரிலா ஷர்மாவின் மூளையில் பல கட்டிகள் இருப்பதால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

மூளையில் ரத்தக்கசிவு

மூளையில் ரத்தக்கசிவு

அந்த்ரிலா உடலின் ஒரு பகுதி செயலிழந்த நிலையில் உள்ளதால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால், கோமா நிலையில் இருப்பதாகவும், செயற்கை வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த்ரிலா உடல்நிலை குறித்த தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் விரைவில் குணம் அடைய வலைத்தளத்தில் வாழ்த்தி வருகிறார்கள்.

குணமடைய பிரார்த்தனை

குணமடைய பிரார்த்தனை

நடிகை அந்த்ரிலாவின் நெருங்கிய தோழியான அலிவியா சர்க்கார் அளித்துள்ள பேட்டியில், அவரது உடல் நிலை மோசமானது குறித்த செய்தியை கேள்விப்பட்டு மிகவும் கவலையில் உறைந்து போனேன். அந்த்ரி ஷர்மா ஒரு வலிமையான பெண், அவள் போராட்ட குணம் கொண்டவள் இரண்டு முறை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளார். தற்போது, இந்த பிரச்சனையில் இதிலிருந்தும் மீண்டு வருவாள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவள் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார். அந்த்ரிலா ஷர்மா கோமா நிலையில் இருப்பதை கேள்விப்பட்ட அவரது தீவிர ரசிகர்களும் அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X