கேன்ஸ் சிறப்பு விருந்து: வித்யாவை அதிர வைத்த தவளை, வாத்துக் கறி
கேன்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவில் ஒருவரான நடிகை வித்யா பாலன் தனக்கு பரிமாறப்பட்ட தவளைக் கறியைப் பார்த்து அதிர்ந்துவிட்டாராம்.
பிரான்ஸின் கேன்ஸ் நகரில் கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 15ம் தேதி துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இதில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவில் ஒருவராக உள்ளார் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.
வித்யா தவிர்த்து கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், மல்லிகா ஷெராவத், ஷெர்லின் சோப்ரா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

புடவையில் வித்யா பாலன்
கேன்ஸ் திரைப்பட விழாவில் நம் பாரம்பரிய உடையான சேலையில் வந்த வித்யா பாலன்.

நடுவர்களுக்கு சிறப்பு விருந்து
கேன்ஸ் திரைப்பட விழா நடுவர்களுக்கு சிறப்பு மதிய விருந்து அளிக்கப்பட்டது.

தவளைக் கறியைப் பார்த்து அதிர்ந்த வித்யா
சிறப்பு விருந்தில் நடுவர்களுக்கு தவளைக் கறி, கோழிக் கறி, வாத்து கறி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன. மற்ற நடுவர்கள் சாப்பிடுகையில் வித்யா மட்டும் தவளைக் கறியைப் பார்த்து ஆடிப் போய்விட்டாராம்.


Click it and Unblock the Notifications











