Cannes 2023: கேன்ஸ் விழாவில் கவர்ச்சியில் பற்ற வைத்த எமி ஜாக்சன்... இது என்ன மாடல் கவுன்?

கேன்ஸ்: பிரான்ஸ் நாட்டின் மிக பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா நேற்று (மே 17) தொடங்கியது.

2023ம் ஆண்டுக்கான 76வது கேன்ஸ் திரைப்பட விழாவான இதில் இந்தியாவில் இருந்தும் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதில் பாலிவுட் நடிகை எமி ஜாக்சனும் கலந்துகொண்டு கேன்ஸ் சிவப்பு கம்பள வரவேற்பில் ஒய்யார நடை போட்டார்.

எமி ஜாக்சன் தனது தொடையழகையும் பின்னழகையும் காட்டியபடி நடை போட்டது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

 Cannes 2023: Amy Jackson is sensational in a thigh-high slit gown in Cannes Red Carpet

கேன்ஸ் விழாவில் கவர்ச்சியில் கலங்கடித்த எமி ஜாக்சன்:பிரான்ஸ் நாட்டின் மிகவும் பிரசித்திப் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. ஆஸ்கருக்கு பிறகு உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் 1946ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தாண்டுக்கான 76வது கேன்ஸ் விழா வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த விழாவில் தமிழ், மராத்தி, மலையாளம், இந்தி என உலகின் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படங்களும், பியூச்சர் பிலிம்களும் திரையிடப்படுகின்றன. இந்தாண்டு இந்தியாவில் இருந்து அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி படம் மிட்நைட் பிரிவிலும், ஆக்ரா திரைப்படம் ஃபோர்ட்நைட் பிரிவிலும், 1990ம் ஆண்டு வெளியான இஷானோ படம் ப்ரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் பிரிவிலும் திரையிடப்படுகின்றன.

இந்தியாவில் இருந்து அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல் முருகன் ஆகியோருடன் திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். மனுஷி சில்லர், ஈஷா குப்தா, சாரா அலிகான், ஐஸ்வர்யா ராஜ் கலந்துகொண்டனர். இந்நிலையில், தற்போது எமி ஜாக்சன், ஊர்வசி ரவுதெல்லா ஆகியோரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று சிவப்பு கம்பள வரவேற்பில் நடை போட்டுள்ளனர்.

 Cannes 2023: Amy Jackson is sensational in a thigh-high slit gown in Cannes Red Carpet

இதில் கறுப்பு நிற கவுன் அணிந்து ஒய்யார நடை போட்ட எமி ஜாக்சன் பலரையும் கிறங்க வைத்துள்ளார். ஒருபக்கம் லோ நெக் ஸ்டைலில் இருக்கும் இந்த கவுன் எமி ஜாக்சனின் வலது பக்க தொடையழகையும் பின்னழகையும் அப்படியே உறித்து வைத்துள்ளது. கவுனின் தொடை பகுதி இறுக்கமாக இருக்க, எமி ஜாக்சன் நடை போடும் போது பார்வையாளர்களை கிறங்கடிக்கிறது.

அதேபோல், ஊர்வசி ரவுதெல்லா நீளமான ஆரஞ்சு நிற கவுனில் நடை போட்டு அசத்தியுள்ளார். தி லெஜண்ட் திரைப்படம் மூலம் தமிழில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த ஊர்வசி ரவுதெல்லா தற்போது பாலிவுட்டில் அடுத்தடுத்து சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், அவரும் எமி ஜாக்சனும் கேன்ஸ் விழாவில் ஸ்டைலிஷாக கலந்துகொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X