கேன்ஸ் பட விழா- கலக்கல் உடையில் வந்து அசத்திய ஐஸ்வர்யா ராய்

63வது கேன்ஸ் பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் புதன்கிழமை தொடங்கியது. இதில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டுள்ளார்.
விழாவின் தொடக்கமாக வெளியிடப்பட்ட ரிட்லி ஸ்காட்டின் ராபின் ஹூட் பட வெளியீட்டுக்கு ஐஸ்வர்யா படு ஒய்யாரமாக வந்து சேர்ந்தார்.
கலங்கடிக்கும் லேவண்டர் கலர் கவுன் அணிந்து வந்த 36 வயதான ஐஸ்வர்யா அனைவரின் கண்களையும் கவர்ந்தார்.
கடந்த ஆண்டும் கூட படு கலக்கலான உடை மற்றும் மேக்கப்புடன் வந்து அசத்தினார் ஐஸ்வர்யா என்பது நினைவிருக்கலாம். இந்த முறை ஐஸ்வர்யாவுடன் அவரது கணவர் அபிஷேக் பச்சன் இணைந்து வரவில்லை. மாறாக ஹாலிவுட் நடிகை ஈவா லோங்கோரியா உடன் வந்திருந்தார்.
இரு அழகான நடிகைகளும் படு ஸ்டைலிஷாக வந்தது கேன்ஸ் விழாவுக்கு புதுக் களையைக் கொடுத்தது.
Comments


Click it and Unblock the Notifications