இதுல என்ன கூச்சம்.. நிறைய ரிலேஷன்ஷிப்ல இருந்துருக்கேன்.. கேப்டன் மில்லர் பட நடிகை ஓபன் டாக்!

சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், ஜான் கொக்கன், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அந்த படத்திற்காக தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் மற்றும் அதிதி பாலன் உள்ளிட்ட பலர் பேட்டியளித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் அந்த படத்தில் நடித்த நடிகை அதிதி பாலன் கொடுத்த பேட்டியில் தான் நிறைய ரிலேஷன்ஷிப்ல இருந்திருக்கேன் என ஓபனாக பேசியுள்ளார்.

அருவி படத்தில் நாயகியாக நடித்து ஒட்டுமொத்த சினிமா உலகையும் வியப்பில் ஆழ்த்தியவர் தான் அதிதி பாலன். ஆனால், அதற்கு பின்னர் பெரியளவில் அதிதி பாலனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழில் குட்டி ஸ்டோரி படத்தில் நடித்த அதிதி பாலன் மலையாளத்தில் கோல்டு கேஸ், படவேட்டு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கில் வெளியான சமந்தாவின் சாகுந்தலம் படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்த இவர் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார்.

Captain Miller actress Aditi Balan opens up about her many relationship and breakups

பிரியங்கா மோகனுடன் ஃபேஸ் ஆஃப்: பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா இடையே வரும் ஃபேஸ் ஆஃப் போலவே கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் அதிதி பாலன் இடையே ஒரு ஃபேஸ் ஆஃப் காட்சி டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது. அதை வைத்து ஏகப்பட்ட மீம்கள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் தனது சொந்த வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை வெளிப்படையாக அதிதி பாலன் பேசியுள்ளார்.

Captain Miller actress Aditi Balan opens up about her many relationship and breakups

அருவி ஹீரோயின்: அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் திரிஷா நடனம் ஆடும் போது பின்னாடி டான்ஸ் ஆடும் மாணவியாக நடித்திருப்பார் அதிதி பாலன். அதன் பின்னர் 2017ம் ஆண்டு வெளியான அருவி படத்தில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணாக நடித்த அவர் தனது நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் வியப்பில் ஆழ்த்தினார். பல முன்னணி நடிகைகளாலே நடிக்க முடியாத நடிப்பை எப்படி இவர் சாதித்துக் காட்டினார் என பலரும் பாராட்டினர். ஆனால், பட வாய்ப்புகளில் அவரது நடிப்பு பெரிதாக எதிரொலிக்கவில்லை.

பல ரிலேஷன்ஷிப்: பள்ளியில் படிக்கும் போதே காதலிக்கத் தொடங்கினேன் என்றும் பக்கத்து ஸ்கூல் பையனை சைட் அடிக்க அந்த ஏரியாவுல தான் சாக்லேட், பிஸ்கட் நல்லா இருக்கும்னு போய்ட்டு வருவேன் என பேசிய அதிதி பாலன் 2 மாதத்திலேயே அந்த முதல் காதல் பிரேக்கப் ஆகி விட்டது என்றும் அதன் பின்னர் பலருடன் காதல் கொண்டேன். நிறைய ரிலேஷன்ஷிப், பிரேக்கப் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

Captain Miller actress Aditi Balan opens up about her many relationship and breakups

எதிர்பார்ப்பு தான் பிரச்சனைக்கு காரணம்: பலருடன் உறவில் இருந்து பிரிந்தது ஏன் என்கிற கேள்விக்கு காதலில் முக்கியமானதே டார்ச்சர் பண்ணக் கூடாது. ஒருத்தருக்கு பிடித்தது போல இன்னொருத்தரை மாற்ற முயற்சிக்கக் கூடாது. சில உறவுகளில் என்னை டார்ச்சர் செய்துள்ளனர். சிலரை நான் டார்ச்சர் செய்ததன் விளைவு தான் பல பிரிவுகளுக்கு காரணம் எனக் கூறியுள்ளார். 33 வயதாகும் இவர் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பா பார்ப்பாரு: இன்ஸ்டாகிராமில் வெளியிடும் போட்டோக்களுக்கு மோசமான கமெண்ட்டுகள் வரும் நான் கண்டுக் கொள்ள மாட்டேன். ஆனால், அதையெல்லாம் என் அப்பா பார்த்து படிச்சிட்டு ரிப்ளை பண்ணுவார். நான் எதுக்குப்பா டைம் வேஸ்ட் பண்றேன்னு சொல்வேன். ஆனால், அவர் ரொம்பவே சென்சிடிவ் யாராவது கொஞ்சம் அசிங்கமா கமெண்ட் போட்டாக்கூட ரொம்பவே அப்செட் ஆகிடுவார் என சோஷியல் மீடியா டாக்ஸிக் பற்றியும் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X