கொரியருக்கு ரூ. 18 லட்சம் செலவு செய்த நடிகை
நியூயார்க்: நடிகை காரா கொரியர் கம்பெனி சேவைக்கு ரூ. 18 லட்சம் செலவு செய்தது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்தவர் மாடல் அழகியும், நடிகையுமான காரா டெலிவிஞ்ச். அவர் கடந்த 2014ம் ஆண்டு ஹாலோவீன் இரவில் ஜாக் டேனியல்ஸ் பாட்டிலை போஸ்ட்மேட்ஸ் கொரியர் மூலம் ஆர்டர் செய்துள்ளார்.

உணவு, மளிகை பொருட்கள், மது உள்ளிட்டவற்றை நாம் ஆர்டர் செய்தால் அதை கடையில் இருந்து பிக்கப் செய்து நம் வீட்டில் டெலிவரி செய்யும் நிறுவனம் போஸ்ட்மேட்ஸ்.
2014ம் ஆண்டில் இருந்து இதுவரை 482க்கும் மேற்பட்ட முறை போஸ்ட்மேட்ஸ் மூலம் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார் காரா. 1038 பொருட்களை சுமார் 234 கடைகளில் இருந்து பிக்கப் செய்து காராவுக்கு டெலிவரி செய்துள்ளது போஸ்ட்மேட்ஸ்.
போஸ்ட்மேட்ஸுக்கு மட்டும் ரூ. 17.8 லட்சம் செலவு செய்துள்ளார் காரா. ஒரு கொரியர் கம்பெனிக்கு லட்சக் கணக்கில் அவர் செலவு செய்தது தெரிந்து பலரும் வியக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











