ஆபாச படங்களில் நடித்த ஸ்வேதா மேனன்?.. பாய்ந்தது வழக்கு.. என்ன நடக்கப்போகுதோ?.. திரையுலகம் ஷாக்

திருவனந்தபுரம்: மலையாளம், தமிழ் திரைத்துறையில் நடிகையாக இருப்பவர் ஸ்வேதா மேனன். திருமணமாகி குழந்தை பெற்றிருக்கும் அவர் தொடர்ந்து நடித்துவருகிறார். இந்நிலையில் ஆபாச படத்தில் நடித்ததாக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் கேரள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு வேறு ஒரு சிக்கலும் எழுந்திருக்கிறது.

மலையாளத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான அனஸ்வரம் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் ஸ்வேதா மேனன். அப்படத்துக்கு பிறகு வெல்கம் டூ கொடைக்கானல் உள்ளிட்ட படங்களில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்த அவர்; தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வரிசையாக நடித்தார். அவரது நடிப்பு வரவேற்பை பெற்றதன் காரணமாக தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

தமிழில் அறிமுகம்: ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான சிநேகிதியே திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து சந்தித்த வேளை, நான் அவன் இல்லை 2, துணை முதல்வர், அரவான் ஆகிய படங்களில் நடித்தார். தமிழைவிடவும் ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில்தான் அவர் அதிக படங்கள் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் கடைசியாக இணையதளம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

திருமணம் செய்துகொண்ட ஸ்வேதா மேனன்: அவர் முதலில் பாபி போன்ஸ்லே என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அதனையடுத்து கடந்த 2011ஆம் ஆண்டு ஸ்ரீவல்சன் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் தொடர்ந்து தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார் அவர்.

Case File Against Actress Shwetha Menon for acting in pornographic films
Photo Credit:

ஆபாச படங்களில் ஸ்வேதா மேனன்?: இந்நிலையில் ஸ்வேதா மேனன் மீது மார்ட்டின் மெனச்சேரி என்ற சமூக ஆர்வலர் காவல் துறையிடம் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், 'ரதி நிர்வேதம், களிமண் போன்ற படங்களில் அதிக கவர்ச்சி காட்டி ஸ்வேதா நடித்திருக்கிறார். மேலும் ஆணுறை விளம்பரத்திலும் நடித்திருக்கிறார். நிதி தேவைக்காக அவர் ஆபாச படங்களில் நடித்தார்' எனகுறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்தப் புகார் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.

நீதிமன்றம் போட்ட உத்தரவு: அதனையடுத்து மார்ட்டின் நீதிமன்றத்துக்கு சென்றார். அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த எர்ணாகுளம் நீதிமன்றம் ஸ்வேதா மேனன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மீது ஆபாசத்தை தடுத்தல் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் மலையாள திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்னொரு சிக்கல்?: இதற்கிடையே மலையாள திரைத்துறையின் நடிகர் சங்கமான AMMA அமைப்புக்கான நிர்வாக குழு தேர்தல் வரும் 15ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் சங்க தலைவர் பதவிக்கு ஸ்வேதா மேனன் போட்டியிடவிருக்கிறார். இப்படிப்பட்ட நிலைமையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அவருக்கு தேர்தலில் சிக்கலை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X