மஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா!
மஹா பட போஸ்டர் விவகாரம் தொடர்பாக ஹன்சிகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : மஹா பட போஸ்டரில் புகைப்பிடிப்பது போன்று நடித்திருப்பது தொடர்பாக நடிகை ஹன்சிகா மீது ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நடிகை ஹன்சிகாவின் 50வது படமாக தயாராகி வருகிறது மஹா. ஜமீல் இப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. அதில், காசி பின்னணியில் காவி உடையில் ஹன்சிகா புகைப்பிடித்தபடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால், தன் பட போஸ்டர் விவாதப் பொருளானது தனக்கு மகிழ்ச்சியே என ஹன்சிகா தெரிவித்திருந்தார். கூடவே இன்னும் இது போல் அப்படத்தில் பல சர்ச்சைக் காட்சிகள் இருக்கிறது என்றும், அவை ஒவ்வொன்றாக வெளியிடப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

ஹன்சிகா மீது வழக்கு:
இந்நிலையில், இப்பட போஸ்டருக்கு எதிராக முதல் வழக்குப் பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், ஹன்சிகாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பாமக பிரமுகர்:
பாமக சமூக நீதி பேரவை மாநிலச் செயலாளரான வழக்கறிஞர் ஜானகிராமன் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார். இது தொடர்பான மனுவில் அவர், ‘மஹா படத்தின் போஸ்டரில் காசி கோயில் பின்புறம் ருத்ராட்ச மாலை அணிந்து காலில் செருப்பு, வலது கை விரல்களில் சுருட்டு போன்ற சிகரெட்டை வைத்துப் புகைப்பது போன்ற காட்சி இந்து மத உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது.

மனு:
மேலும் இது தொடர்பாக ஹன்சிகா மற்றும் படத்தின் இயக்குனர் ஜலீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போஸ்டர் பிரச்சினை:
ஏற்கனவே, சர்கார் பட போஸ்டரில் நடிகர் விஜய், புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்திருந்ததும், அயோக்யா பட போஸ்டரில் விஷால் கையில் மது பாட்டிலுடன் இருப்பதும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











