படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கு, ஆனால் ...: நடிகை அடா சர்மா
Recommended Video

சென்னை: பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அனைத்து துறைகளிலும் உள்ளது என்கிறார் நடிகை அடா சர்மா.
பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பது குறித்து நடிகைகள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளார். தன்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்தார்.
இந்நிலையில் சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவாவின் ஜோடியாக நடிக்கும் அடா சர்மா கூறியிருப்பதாவது,

பாலியல் தொல்லை
அனைத்து துறைகளிலுமே பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் சினிமா துறையை மட்டும் பூதக்கண்ணாடியால் பார்க்கிறார்கள். பாலியல் தொல்லை வீட்டில் இருந்து துவங்குகிறது. வீட்டில் உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள்.

படுக்கை
கேவலமான புத்தி உள்ளவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பார்கள். அவர்களை நெருங்க விடக் கூடாது என்று பெண்கள் முடிவு செய்துவிட்டால் யாராலும் எதுவும் செய்ய முடியாது.

நடிகைகள்
என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை. திறமை இருந்தால் போதும் யாரையும் அட்ஜஸ்ட் செய்யத் தேவையில்லை. நடிகையான பிறகு விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொண்டேன்.

மகன்கள்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. என் பாதுகாப்புக்காக ஆட்களை வேலைக்கு வைத்துள்ளேன். தேவையில்லாமல் ஊர் சுற்றாதே, நேரத்திற்கு வீட்டிற்கு வா என்று மகள்களை பார்த்து கூறும் பெற்றோர் பெண்களை மதிக்க வேண்டும் என்று மகன்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பாலியல் கொடுமைகள் நடக்காமல் தடுக்க முடியும் என்கிறார் அடா சர்மா.


Click it and Unblock the Notifications











