பட வாய்ப்புக்காக படுக்கை: உண்மையை சொன்ன சமந்தா

By Siva

Recommended Video

சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை பற்றி உண்மையை சொன்ன சமந்தா - வீடியோ

சென்னை: சினிமா துறையில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி தெரிவித்துள்ளார் சமந்தா.

கோலிவுட், டோலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவராக உள்ளார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் பிசியான நடிகையாக உள்ளார். திருமணமத்திற்கு பிறகு அவர் ராம்சரண் தேஜாவுடன் நடித்த ரங்கஸ்தலம் படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில் சினிமா மற்றும் திருமண வாழ்க்கை பற்றி சமந்தா கூறியிருப்பதாவது,

முத்தம்

முத்தம்

அண்மையில் ரிலீஸான ரங்கஸ்தலம் படத்தில் நான் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து முத்தக் காட்சியில் நடித்தது சர்ச்சையானது. என் குடும்பத்தாரோ என் கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு எனக்கு ஆதரவு தெரிவித்தனர்.

படங்கள்

படங்கள்

திருமணத்திற்கு பிறகு நல்ல நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன். எனக்கு திருமணமாகிவிட்டது என்று ரசிகர்கள் என்னை ஒதுக்கவில்லை. இன்னும் பழையபடியே அன்பு செலுத்துகிறார்கள்.

விஷால்

விஷால்

விஷாலின் இரும்புத்திரை படத்தில் நடித்தது நல்ல அனுபவம். நான் பொதுவாக புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வது இல்லை. ஆனால் மித்ரன் இயக்கத்தில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன்.

படுக்கை

படுக்கை

பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா மட்டும் அல்ல அனைத்து துறைகளிலுமே உள்ளது. சினிமாவில் நல்லவர்கள், நேர்மையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சில கறுப்பு ஆடுகளும் உள்ன. அந்த கறுப்பு ஆடுகளால் தான் பெண்களுக்கு மோசமான விஷயங்கள் நடந்திருக்கும்.

கமல்

கமல்

அரசியலில் குதித்துள்ள ரஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோரில் நான் யாரை ஆதரிக்கிறேன் என்று கேட்கிறார்கள். எனக்கு அரசியல் பற்றி தெரியாது. யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X