தயாரிப்பாளர்கள் கெஸ்ட் ஹவுஸுக்கு தனியாக வரச் சொன்னார்கள்: 'கேப்டன்' ஹீரோயின் பகீர்

By Siva

Recommended Video

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி நடிகை ஆமனி- வீடியோ

ஹைதராபாத்: தமிழ், தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று நடிகை ஆமனி தெரிவித்துள்ளார்.

புதிய காற்று படம் மூலம் நடிகையானவர் ஆமனி. சரத்குமாரின் இது தான்டா சட்டம், விஜயகாந்தின் ஹானஸ்ட் ராஜ் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

திரையுலகம்

திரையுலகம்

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதா என்று ஆமனியிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் தெலுங்கு மட்டும் இல்லை தமிழ் திரையுலகிலும் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்றார்.

கெஸ்ட் ஹவுஸ்

கெஸ்ட் ஹவுஸ்

நான் நடிக்க வந்த புதிதில் புதிய தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து போன் அழைப்புகள் வந்தன. என்னை தனியாக கெஸ்ட் ஹவுஸுக்கு வரச் சொன்னார்கள். அவர்கள் எதற்காக அழைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டதால் நான் செல்லவில்லை என்றார் ஆமனி.

பிரபலங்கள்

பிரபலங்கள்

படுக்கைக்கு அழைத்து வரும் போன் கால்கள் எல்லாம் புதிய நிறுவனங்களில் இருந்து தான் வந்தன. பிரபலமான இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ அப்படி அழைத்தது இல்லை என்று ஆமனி தெரிவித்தார்.

மம்மூட்டி

மம்மூட்டி

ஆமனி பாலகிருஷ்ணா, நாகர்ஜுனா, விஜயகாந்த், மம்மூட்டி உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்த நிலையில் ஆமனி அதை உறுதி செய்துள்ளார்.

ஸ்ரீ ரெட்டி

ஸ்ரீ ரெட்டி

படுக்கைக்கு அழைப்பது குறித்து துணிச்சலாக பேசியதுடன் அதற்கு எதிராக ஸ்ரீ ரெட்டி போராடி வருகிறார். அவரின் செயலை பார்த்து பிற நடிகைகளும் தைரியமாக பேசத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X