பெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்?: ஆண்ட்ரியா
Recommended Video

சென்னை: பட வாய்ப்புக்காக பெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள் என்று நடிகை ஆண்ட்ரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்ததை அடுத்து பல நடிகைகளுக்கு துணிச்சல் வந்துள்ளது. பட வாய்ப்பு தருகிறேன் என்று கூறி தங்களிடம் தவறாக நடந்து கொண்டவர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த மீ டூ இயக்கம் குறித்து நடிகை ஆண்ட்ரியாவும் கருத்து தெரிவித்துள்ளார்.

மாற்றம்
மீ டூ இயக்கத்தை வரவேற்கிறேன். தற்போது மாற்றத்திற்கான நேரம். பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கத் துவங்கியுள்ளது. இந்த மீ டூ இயக்கம் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வாய்ப்பு இல்லை. பட வாய்ப்புக்காக என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

படுக்கை
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது ஆண்களின் தவறு மட்டும் அல்ல. வேலைக்காக படுக்கைக்கு செல்ல பெண்கள் விருப்பமாக இல்லாவிட்டால் ஆண்கள் அழைக்க மாட்டார்கள். எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது, நான் யாருடனும் படுக்கைக்கு செல்ல மாட்டேன் என்று பெண்கள் தைரியமாக சொன்னால் தான் இந்த பழக்கம் முடிவுக்கு வரும் என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

நடிகர்கள்
நான் பெரிய, பெரிய இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றுகிறேன். நல்ல நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறேன். படுக்கைக்கு செல்லாமல் தான் இத்தனை படங்களிலும் நடித்துக் கொண்டிருக்திறேன். கடின உழைப்பு, திறமை மீது நம்பிக்கை வைத்திருப்பவள் நான் என்கிறார் ஆண்ட்ரியா.

பேட்டி
படுக்கைக்கு செல்லாமல் நல்ல படங்களில் நடித்து வரும் பல நடிகைகளை எனக்கு தெரியும் என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். பட வாய்ப்புக்காக பலரும் படுக்கைக்கு அழைப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஆண்ட்ரியா இப்படி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











