ஸ்ரீரெட்டி சொல்வது உண்மை! 1983லிருந்தே பாலியல் தொல்லை இருக்கிறது! பழம்பெரும் நடிகை தடாலடி!

ஸ்ரீரெட்டி சொல்வது உண்மைதான் என பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.

Recommended Video

பாலியல் தொல்லையை பற்றி குட்டி பத்மினி-வீடியோ

சென்னை: ஸ்ரீரெட்டி சொல்வது உண்மைதான் என நடிகை குட்டி பத்மினி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

சினிமாத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக கடந்த சில மாதங்களாக பரபரப்பு புகார் கொடுத்து வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னுடன் படுக்கையை பகிர்ந்துவிட்டு வாய்ப்புத் தராமல் ஏமாற்றிய இயக்குனர்கள், நடிகர்கள் என பெரிய லிஸ்ட்டே வெளியிட்டுள்ளார்.

Casting couch is not new to cinema says Kutty Padmini!

ஸ்ரீரெட்டிக்கு எதிராக பலர் பேசிவரும் நிலையில், சில நடிகைகளும் சினிமாவில் அப்படியெலாம் இல்லை. நடிகைகளுக்கு நல்ல மரியாதை உள்ளது எனவும், கௌரவமாக நடத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சினிமாவில் பாலியல் தொல்லை என்பது அந்த காலத்திலிருந்தே இருப்பதாக நடிகை குட்டி பத்மினி தெரிவித்துள்ளார். ஸ்ரீரெட்டி சொல்லும் லிஸ்ட்டை கேட்கும்போது வருத்தமாக உள்ளது. படுக்கையை பகிர்ந்து கொள்வதன் மூலமே வாய்ப்பைப் பெற முடியும் என நினைத்துள்ளார். இவ்வளவு பேர் அவரை நன்கு பயன்படுத்தியும் வாய்ப்பு தரமால் போனது சோகமான விஷயம்.

மேலும், யாரும் அவரை பலாத்காரம் செய்யவில்லை. அவருடைய உடன்பாட்டில் தான் நடந்திருக்கிறது. தன்னுடைய திறமையை மதித்து வாய்ப்பு கொடுங்கள், இல்லையென்றால் எனக்கு வாய்ப்பு வேண்டாம் என உறுதியாக இருந்திருந்தால் இந்த நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்.

தவறு செய்தாலும் பரவாயில்லை, வாய்ப்பு கிடைத்தால் போதும் என நினைத்துள்ளார். சினிமா மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலுமே தவறு நடக்கத்தான் செய்கிறது. ஆனால் எந்தத் துறையாக இருந்தாலும், நம்முடைய அனுமதி இல்லாமல் தவறு நடக்க வாய்ப்பில்லை எனக் குட்டி பத்மினி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X