பூனையிடம் உதை வாங்கிய அமலா பால்.. புருஷனை பத்தி வாயே திறக்கலையே.. வைரலாகும் வீடியோ!

சென்னை: நடிகை அமலா பால், பூனையுடன் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Honey Moon! Janata Curfew | Amala Paul Bavindar Singh | Atlee Priya

இயக்குநர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்த அமலா பால், தற்போது பவிந்தர் சிங் என்பவரை திருமணம் செய்துள்ளதாக வைரலான புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஆனால், இன்னமும், தனது திருமணம் குறித்து அமலா பால் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஆடையின்றி

ஆடையின்றி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால், ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து அசத்தினார். ஆனால், அந்த படத்திற்கு பிறகு, அமலா பாலுக்கு கோலிவுட்டில் இருந்த மார்க்கெட் அதள பாதாளத்துக்கே சென்று விட்டது. விஜய்சேதுபதியின், யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் இருந்தும் நீக்கப்பட்டார்.

சிறகு முறிந்த பறவை

சிறகு முறிந்த பறவை

ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் லீடு ரோலில் நடித்த அதோ அந்த பறவை கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், வெளியாகவில்லை. ஜனவரி 31, பிப்ரவரி 14 என பல தேதிகள் அறிவிக்கப்பட்டும், கடைசி வரை அதோ அந்த பறவை ரிலீஸ் ஆகவில்லை. இனிமே கொரோனா காலம் முடிந்து எப்போது ரிலீஸ் ஆகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இயக்குநர் ஏ.எல். விஜய்யுடன் அமலா பால் விவாகரத்து செய்துக் கொண்ட நிலையில், அமலா பால் தனது காதல் குறித்து சூசகமாக அறிவித்திருந்தார். பின்னர், மும்பை பாடகர் பவிந்தர் சிங்குடன் அமலா பால் லிவ்வின்னில் இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகின, அதனைத் தொடர்ந்து, இருவரும் ரகசியமாக திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

வாய் திறக்கவில்லை

வாய் திறக்கவில்லை

அமலா பாலின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இந்தியளவில் டிரெண்டான நிலையிலும், தனது திருமணத்தை பற்றியும், புதுப் புருஷன் பற்றியும் நடிகை அமலா பால் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், இரண்டாவதாக திருமணம் செய்த பவிந்தர் சிங்குடன் அமலா பால் சேர்ந்து வாழவில்லை என்ற தகவல்களும் பரவி வருகிறது.

என்னா உதை

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கும் நிலையில், பூனையுடன் விளையாடும் வீடியோ ஒன்றை நடிகை அமலா பால் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீட்டில், அமலா பாலின் இம்சை தாங்காமல், அவரை உதைத்து விட்டு பூனை ஓடுகிறது. அமலா பால் வெளியிட்ட இந்த இன்ஸ்டா வீடியோவை 3 லட்சத்துக்கும் மேலானவர்கள் பார்த்துள்ளனர்.

கல்யாண கேள்வி

கல்யாண கேள்வி

பூனையுடன் அமலா பால் விளையாடும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், உங்களுக்கு இரண்டாவது கல்யாணம் ஆகிட்டதாக சொல்றாங்களே என ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு பதிலளிக்காமல், ஹா ஹா என பதிவிட்டு சிரித்து மழுப்பியுள்ளார். கமெண்ட்டில் பல ரசிகர்களும் தொடர்ந்து இதே கேள்வியை எழுப்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X