புதுசா சொகுசு கார் வாங்கிய கேத்தரின் தெரசா.. விலையை கேட்டா சும்மா ஆடி போயிடுவீங்க!

சென்னை: ஒரு குச்சி, ஒரு குல்பி என ஆடி ரசிகர்களை ஆட்டம் போட வைத்தவர் நடிகை கேத்தரின் தெரசா. சமீபத்தில் உடல் எடை அதிகரித்து பருமனான தோற்றத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், அதைபற்றி எல்லாம் தான் கவலைப்படவில்லை என்றும் தான் செம கெத்தாக தான் வாழ்ந்து வருகிறேன் என்பதை நிரூபிக்கும் விதமாக புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கி அதன் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா.

செம ஸ்லிம்மாக

செம ஸ்லிம்மாக

மெட்ராஸ், கதகளி, கணிதன், கலகலப்பு 2, வந்தா ராஜாவாதான் வருவேன், நீயா 2 உள்ளிட்ட தமிழ் படங்களிலும், சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார் நடிகை கேத்தரின் தெரசா. செம ஸ்லிம்மான உடல் தோற்றத்துடன் பாடல்களில் நடனமாடி இளைஞர்களை கவர்ந்த அவர் தற்போது ஆள் அடையாளமே தெரியாத வண்ணம் மாறியுள்ளார்.

அருவம் தான் லாஸ்ட்

அருவம் தான் லாஸ்ட்

நடிகர் சித்தார்த் மற்றும் கேத்தரின் தெரசா நடிப்பில் வெளியான அருவம் திரைப்படம் தான் கேத்தரின் தெரசாவுக்கு தமிழில் இப்போதைக்கு கடைசி படமாக உள்ளது. தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், புதிய படங்களில் அவர் புக் ஆகவே இல்லை.

உடல் எடை கூடி

உடல் எடை கூடி

சினிமா வாய்ப்புகள் இன்றி தவித்து வந்த நிலையில், அவரது உடல் எடை கூடி பருமனாக மாறிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கின. மெட்ராஸ் படத்துல கார்த்தியோட நடிச்ச நாயகியின் இப்போதைய நிலைமை என பல யூடியூப் சேனல்களே வீடியோ போட்டு கலாய்க்க ஆரம்பித்தனர்.

சொகுசு கார்

சொகுசு கார்

ஆனால், அதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாமல் தனது வாழ்க்கையை ராணி போல வாழ்ந்து வருகிறார் நடிகை கேத்தரின் தெரசா. சமீபத்தில் புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கிய அவர், அதன் அருகே நின்றபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்து தனது ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இவ்வளவு காஸ்ட்லியா

இவ்வளவு காஸ்ட்லியா

Kia EV6 எனும் வெள்ளை நிற சொகுசு காரை வாங்கி உள்ளார் நடிகை கேத்தரின் தெரசா. இதன் மதிப்பு 65 லட்சம் ரூபாய் என்பதை அறிந்த ரசிகர்கள் வாயை பிளந்தபடி கேத்தரின் தெரசாவுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். தமிழில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் பிம்பிசாரா, வால்டர் வீரய்யா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் கேத்தரின் தெரசா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X