எப்படிப்பட்ட வரிகள் தெரியுமா.. கவர்ச்சியில் அதகளம் செய்யும் நடிகை.. கேங்கர்ஸ் கை கொடுக்குமா?

சென்னை: இயக்குநர் சுந்தர் சி நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடித்திருக்கும் படம் கேங்கர்ஸ். நகரம் படத்திற்கு வடிவேலு - சுந்தர் சி காம்போவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருவரும் இணைந்தால் காமெடி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் டிரண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதற்கு நடிகைதான் காரணமாம்.

வின்னர், லண்டன், கிரி, நகரம் போன்ற படங்களில் வடிவேலு காமெடி சீன்கள் இன்றைக்கும் ரசிக்கும்படி இருக்கின்றன. இதற்கு காரணம் இயக்குநர் சுந்தர் சி தான். இவர் இயக்கும் படங்களில் ஹீரோக்கள் செஞ்சூரி அடிக்கிறார்களோ இல்லையோ காமெடி சீன்கள் செஞ்சூரியை தாணடி செல்லும். காமெடி காட்சிகளும் புதுமையான கோணத்தில் ரசிக்கும் படியே இருந்துள்ளன. முகம் சுழிக்காத வகையில் பஞ்ச் வசனங்களாக காமெடி காட்சியில் அனல் பறக்கும். குறிப்பாக வின்னர் படத்தில் இது ரத்த பூமி, ஆம நேத்து நீ அடிக்க வரேன் சொன்ன வரவே இல்லை. இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இக்காட்சிகளை ரசிகர்கள் இன்றைக்கும் ரீ கிரியேட் செய்து வீடியோவாக வெளியிடுகின்றனர்.

catherine-tresa-dances-to-the-controversial-song-from-the-movie-gangers

காமெடி கிங்: இயக்குநர் சுந்தர் சி ஒரு காமெடி கிங் தான். இவர் இயக்கிய படங்கள் என்றைக்கும் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளன. உள்ளத்தை அள்ளித்தா படம் முதல் தற்போது இயக்கி நடித்திருக்கும் கேங்கர்ஸ் வரை சினிமா ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கின்றன. இவரது படங்களில் நடிகர்களை காட்டிலும் காமெடியன்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம், சூரி, யோகி பாபு என அனைத்து காமெடி ஹீரோக்களும் இவரது படத்தில் நடித்து நற்பெயர்களை பெற்றுள்ளனர். காமெடியும் பெரிய அளவில் ரீச் கிடைத்திருக்கிறது. இவர் இயக்கும் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ காமெடி கட்டாயம் இருக்கும். யார் மனதையும் புண்படுத்தாத வகையில் அமைந்திருக்கும்.

catherine-tresa-dances-to-the-controversial-song-from-the-movie-gangers

டிரெண்டிங்கில் முதலிடம்: நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி - வடிவேலு காம்போவில் உருவாகியிருக்கும் படம் கேங்கர்ஸ். இப்படத்தின் டிரைலர் கடந்தவாரம் வெளியாகி டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. வடிவேலு காமெடியும் ரசிக்கும் படி இருப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கழுத்துக்கு கீழே யோகா போன்ற காட்சியில் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். இப்படம் வரும் 24ஆம் தேதி ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் பக்கா பொழுதுபோக்கு நிறைந்த காமெடியை ரசிக்க தயாராக இருக்கின்றனர். இந்த சூழலில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் டீசர் வீடியோ வெளியாகியிருக்கிறது.

catherine-tresa-dances-to-the-controversial-song-from-the-movie-gangers

கவர்ச்சி நடனம்: சுந்தர் சி படங்களில் காமெடிக்கு கேரண்டி என்பது போல் நடிகைகளின் கவர்ச்சி நடனமும் அதிகம் இடம்பெறுவது உண்டு. சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படத்திலும் தமன்னா, ராக்ஷி கண்ணா ஆகிய இருவரும் அச்சோ அச்சோ அச்சச்சோ பாட்டிற்கு போட்ட கவர்ச்சி நடனம் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. அதேபோன்று துள்ளலான பாட்டிற்கு நடிகை கேத்ரின் தெரசா கவர்ச்சியில் குறை இல்லாமல் ஆட்டம் போட்டிருக்கிறார். பாட்டும் சர்ச்சையை கிளப்பும் வகையிலேயே உள்ளன. இதில், குப்பன் தொல்லை தாங்கலையே என்ற வரிகள் இடம்பிடித்திருக்கின்றன. இந்த பாட்டிற்கு தன்னால் முயன்ற அளவிற்கு கேத்ரின் தெரசா கவர்ச்சி காட்டியிருக்கிறார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது மார்க்கெட்டை உயர்த்த கணக்கு போட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X