மணப்பெண் கோலத்தில் சும்மா ஜில்லுனு இருக்கும் கேத்தரின் தெரசா..வைரல் பிக்ஸ் !
சென்னை : மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்யப்பட்ட நடிகைகள் கேத்தரின் தெரசா நடித்த முதல் திரைப்படத்திலேயே விருதுகளை அள்ளிக் குவித்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் கேத்ரின் தெரசா விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்தில் நடித்து ரொமான்ஸில் கலக்கியிருப்பார்.
சமீபத்தில் இவர் கிரீன் இந்தியா சேலஞ்ச் சவாலை ஏற்று செய்து முடித்த புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து இப்பொழுது மணப்பெண் கோலத்தில் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுடன் ஜில்லுனு இருக்கும் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு காட்சி விருந்து அளித்து உள்ளார்.

மெட்ராஸ்
கன்னடத்தில் வெளியான சங்கர் ஐபிஎஸ் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை கேத்ரின் தெரசா அதைத் தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என அடுத்தடுத்த திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வர தமிழில் பா.ரஞ்சித் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.

வித்தியாசமான கதை
நடித்த முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிகைக்காக பல விருதுகளை வாங்கிக் குவித்த கேத்தரின் தெரசா அதைத் தொடர்ந்து கதகளி, கடம்பன், கணிதன், கலகலப்பு 2 என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெற்று வந்ததோடு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று தமிழிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பதித்து கொடியை பறக்க விட்டு வருகிறார்.

உச்சகட்ட ரொமான்ஸ்
தென் இந்தியாவில் பெண்களின் கனவு கண்ணன் என அழைக்கப்படும் விஜய்தேவரகொண்டாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக எதார்த்தமான நடிப்பில் அனைவரையும் அசர வைத்திருந்த கேத்தரின் தெரசா அதில் விஜய் தேவரகொண்டா உடன் உச்சகட்ட ரொமான்ஸில் நடித்து பார்க்கும் அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.

மணப்பெண் கோலத்தில்
இந்த நிலையில் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் கேத்தரின் தெரசா சமீபத்தில் கிரீன் இந்தியா சேலஞ் சவாலை ஏற்று வெற்றிகரமாக செய்து காட்டி அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டதை அடுத்து அது வைரலானது. இந்தநிலையில் இப்பொழுது பார்க்கப் பார்க்க திகட்டாத ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுடன் அட்டகாசமான மணப்பெண் கோலத்தில் க்யூட்டாக சிரித்தவாறு பல்வேறு கோணங்களில் எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட கேத்தரின் தெரசாவை வர்ணித்து வரும் ரசிகர்கள் சில்லறையை சிதற விட்டு தவம் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications











