சம்பளம் படியல... சீனியர் ஹீரோ படத்தில் இருந்து சத்தம் போடாமல் விலகிய இளம் ஹீரோயின்!
சென்னை: சீனியர் ஹீரோவுடன் நடிக்க, அதிக சம்பளம் கேட்டதாகக் கூறப்பட்ட ஹீரோயின் அந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளார்.
கார்த்தி நடித்த மெட்ராஸ், விஷாலின் கதகளி, கணிதன், கதாநாயகன், வந்தா ராஜாவாதான் வருவேன் உட்பட சில படங்களில் நடித்தவர் கேத்தரின் தெரசா.
இவர் தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துவருகிறார்.

விஜய் தேவரகொண்டா
இப்போது விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடித்துள்ளார். இதில் ராஷிகண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். அதில் ஒருவராக, கேத்தரினும் நடிக்கிறார்.

இரண்டு ஹீரோயின்
இதையடுத்து பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க இவரிடம் பேசி வந்தனர். போயபதி ஶ்ரீனு இயக்கும் இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க கேட்டனர். முதலில் இந்தக் கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாகக் கூறப்பட்டது. கால்ஷீட் பிரச்னை காரணமாக, அவர் மறுத்துவிட்டார். இதையடுத்தே இவரிடம் பேசினர்.

ஒரு கோடி
இதில் நடிக்க கேத்தரின் தெரசா ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். அதைக் கொடுக்க படக்குழு முன் வந்துள்ளதாகவும் அவர் இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.

விலகினார்
இந்நிலையில் அவர் கேட்ட சம்பளம் கிடைக்கவில்லை என்பதால் இந்தப் படத்தில் இருந்து கேத்தரின் விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











