வாய்ப்பு இல்லை.. மீண்டும் கவர்ச்சியில் குதித்த நடிகை.. பிகினி படத்தை வெளியிட்டு கலக்கல்!
தமிழ் தெலுங்கில் கலக்கி வரும் நடிகை கேத்ரீன் தெரசா தன்னுடைய பிகினி படத்தை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழ் தெலுங்கில் கலக்கி வரும் நடிகை கேத்ரீன் தெரசா தன்னுடைய பிகினி படத்தை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.
ம்ம் நீதான் வேணும் கட்டிக்கிறியா என்று வசனம் பேசி மெட்ராஸ் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆனவர் கேத்ரீன் தெரசா. அந்த படத்தில் இவர் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.
ஆனால் அதன்பின் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இவருக்கு வந்த வாய்ப்புகளும் கல்லூரி பெண் கேரக்டரிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து என்ன
இதனால் இவர் அதிரடியாக கவர்ச்சியில் குதித்தார். கணிதன் மற்றும் கலகலப்பு 2 இரண்டு படத்திலும் கவர்ச்சியாக நடித்தார். அதிலும் இவர் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து ஐட்டம் நம்பரில் ஆடியது பெரிய வைரலானது.

தெலுங்கு
ஆனால் அதற்கு பின்பும் இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது இவர் தமிழில் புது படம் எதிலும் கமிட் ஆகவில்லை. தெலுங்கில் வரிசையாக நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு எப்படி
தெலுங்கிலும் லீட் ரோல் அதிகமாக கிடைப்பதில்லை. அங்கு அவர் அதிகமாக ஐட்டம் நம்பர் பாடல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது வாய்ப்பிற்காக கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்ட்டா புகைப்படம்
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தன்னுடைய கவர்ச்சியான பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நீல நிற பிகினி உடை மீது கோட் போட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த புகைப்படம் இணையம் முழுக்க ஹிட் அடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











