நான்கு ஆண்டுகள் சட்டவிரோத வாழ்க்கை.. சிக்கிய சின்னத்திரை நடிகை.. நாடு கடத்த அதிக வாய்ப்பா?
சென்னை: நடிகை சர்மிளா தாபா, சின்னத்திரையில் இருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கி தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார். ஆங்கராக தனது கெரியரை தொடங்கிய இவர், அதன் பின்னர், காமெடியன், டான்சர் என தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு வெளிப்படுத்தியும் வருகிறார். படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். தற்போது இவர் நான்கு ஆண்டுகள் சட்டவிரோதமாக வாழ்ந்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.
நடிகர் அஜித்தின் வேதாளம், விஸ்வாசம், ரவி மோகனின் சகலகலா வல்லவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். சிறிய கதாபாத்திரங்கள் என்றாலும் கொஞ்சமும் யோசிக்காமல் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும் ஷார்ட் ஃப்லிம் தொடங்கி, சீரியல், வெப் சீரீஸ் என அனைத்திலும் ரவுண்டு கட்டி அடித்து வருகிறார். திறமை இருந்தால் போதும் நாம் வென்று காட்டிவிடலாம் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக் காட்டு.
சில ஆண்டுகளுக்கு முன்னர், பிரபல நடன இயக்குநர் ரகு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இல்லற வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டு இருக்கும் நேரத்தில் தான் நடிகைக்கு சிக்கல் வந்துள்ளது. இது அவருக்கு மட்டும் இல்லாமல், அவரது மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சர்மிளா தாபாவை பலரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என நினைத்துக் கொண்டு உள்ளார்கள். ஆனால் உண்மையில் இவரது பூர்வீகம் நேபாளம். தன் மீது இருக்கும் திறமையை நம்பிக் கொண்டு இந்தியாவுக்கு, அதுவும் தமிழ்நாட்டிற்கு வந்தவர். இப்போது தமிழ்நாட்டுப் பெண்ணாகவே மாறி விட்டார். ஆனால், இவரது பெற்றோர்கள், இவர்களின் பூர்வீகமான நேபாளத்தில் தான் உள்ளார்கள். சர்மிளா தாபா யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் இந்தியா டூ நேபாளம் என்ற டிராவல் வீடியோவில் தனது சொந்த ஊரையும் வீட்டையும் காட்டினார்.

சர்மிளா தாபா: இந்நிலையில்தான், ஷர்மிலா தாபா மீது சென்னை வெளிநாட்டவர் மண்டல அலுவலகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஷ்ர்மிலா தாபா நேபாளைச் சேர்ந்தவர் என்பதால், கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியாவில் தங்க பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். தற்போது நடிகை புதிய பாஸ்போர்ட் வேண்டும் என விண்ணப்பித்துள்ளார். ஏற்கனவே வாங்கிய பாஸ்போர்ட்க்கு, சென்னை அண்ணாநகரில் தங்கியிருக்கும் முகவரியைக் கூறி பாஸ்போர்ட் வாங்கியுள்ளார்.
பிரச்னை: இப்போது கேட்டிருக்கும் பாஸ்போர்ட்டுக்கு வியாசர்பாடி முகவரியைக் கொடுத்துள்ளார். அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சர்மிளா தாபா, வியாசர்பாடிக்கு அருகில் உள்ள பெரம்பூரில் வசிப்பது தெரியவந்தது. அதன் பின்னர்தான் சர்மிளா தாபாவின் பழைய டாக்குமென்ட்களை தேடி எடுத்துப் பார்த்துள்ளனர். அப்போதுதான் சர்மிளா தாபா சிக்கியுள்ளார்.

பாஸ்போர்ட்: அதாவது 2011ஆம் ஆண்டு வாங்கிய பாஸ்போர்ட் 2021ஆம் ஆண்டே காலாவதி ஆகிவிட்டது. ஆனால் பாஸ்போர்ட்டை புதுப்பிக்காமல், நடிகை எப்படி இந்தியாவில் வாழ்ந்து வருகிறார் என கிளற ஆரம்பித்தனர். போலியான ஆதார் கார்ட், ரேஷன் கார்ட் சமர்பித்து ஆதார் அட்டை வாங்க முயற்சித்தார் என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால், கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து சட்டவிரோதமாக தான் இந்தியாவில் இருக்கிறார் என்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. அதாவது நடிகைக்கு யார் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை பெற்றுக் கொடுத்தது என்ற கேள்வியை அதிகாரிகள் எழுப்பி வருகிறார்கள்.
வழக்கு: இந்நிலையில் பாஸ்போர்ட் சட்டம் மற்றும் மோசடி சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களின் அடிப்படையில் நடிகை சர்மிளா தாபா மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணை வளையத்திற்குள் சர்மிளா தாபா இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. மேலும் சர்மிளா தாபா இந்த பிரிவுகளில் கைது செய்யப்பட்டால், நாடு கடத்தவும் வாய்ப்பு இருக்கிறதா என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











