தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி... சர்ச்சை நடிகையின் சென்னை வீடு, பியூட்டி பார்லரில் சிபிஐ ரெய்டு

By

கொச்சி: நடிகைக்கு சொந்தமான சென்னை வீடு மற்றும் பியூட்டி பார்லரில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.தமிழில் கார்த்தி நடித்த பிரியாணி, இந்தியில் ஜான் ஆபிரஹாம் நடித்த மெட்ராஸ் கபே படங்களில் நடித்தவர், லீனா மரியா பால். மலையாளத்தில் ரெட் சில்லீஸ், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தாதா ரவி பூஜாரி

தாதா ரவி பூஜாரி

இவர் கொச்சியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இங்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பைக்கில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பானது. சம்பவம் நடந்தபோது பார்லருக்குள் வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை. பிரபல தாதா ரவிபூஜாரியின் ஆட்கள்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

போலி ஆவணம்

போலி ஆவணம்

லீனா மரியா பால், தனது காதலர் சுகாஷ் சந்திரசேகருடன் சேர்ந்து, சென்னை அம்பத்தூர் கனரா வங்கியில், போலி ஆவணம் மூலம் 19 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு புழலில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பண மோசடியில்

பண மோசடியில்

இந்நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவிடம் சிபிஐ அதிகாரிகள் என்று கூறி 2 பேர் பண மோசடியில் ஈடுபட்ட முயன்றுள்ளனர். இதுபற்றி ராவ் புகார் செய்தார். மோசடியில் ஈடுபட்டவர்கள் ஐதராபாத்தைச் சேர்ந்த மணிவர்ண ரெட்டி, மதுரையை சேர்ந்த செல்வம் ராமராஜன் என்பது போலீசாருக்குத் தெரியவந்தது.

சென்னை வீடு

சென்னை வீடு

அவர்கள் இருவரும் நடிகை லீனா மரியா பால் மற்றும் அவர் காதலர் சுகாஷ் சந்திரசேகர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள். லீனா மரியா பாலின் சென்னை வீட்டிலும் கொச்சியில் உள்ள பியூட்டி பார்லரிலும் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை வியாழக்கிழமை நடந்துள்ளது. சோதனையில் என்ன கைப்பற்றப்பட்டது என்கிற விவரம் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X