Athulya Ravi: நடிகை அதுல்யா வீட்டில் பணிப்பெண் கைவரிசை.. சிசிடிவி மூலம் பதிவான பகீர் காட்சி!
கோவை: நடிகை அதுல்யா ரவி குறும்படங்களில் நடித்து அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர். காதல் கண் கட்டுதே படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த அதுல்யா ரவி, தொடர்ந்து சாட்டை, கேப்மாரி போன்ற படங்களில் நடித்து தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்தார்.
சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நாயகியாக நடித்து ஏராளமான கவர்ச்சியை காட்டினார். இருந்தபோதிலும் இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாத சூழல் காணப்படுகிறது. இந்நிலையில் அதுல்யா ரவி வீட்டில் பணிப்பெண் கைவரிசை காட்டிய விஷயம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை அதுல்யா ரவி: நடிகை அதுல்யா ரவி குறும்படங்கள் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். காதல் கண் கட்டுதே படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தொடர்ந்து சாட்டை, கேப்மாரி போன்ற படங்களிலும் நடித்திருந்தார். நடிகர் ஜெய்யுடன் அவரது 25வது படமான கேப்மாரி படத்தில் அதீத கவர்ச்சியுடன் நடித்து ரசிகர்களை கிறங்கடித்தார். தொடர்ந்து சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படத்திலும் அவரது கவர்ச்சி ஆட்டம் தொடர்ந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவில் இந்தப் படம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அதுல்யா வீட்டில் திருட்டு: இந்தப் படங்களை தொடர்ந்து வட்டம், கடாவர் போன்ற படங்களிலும் சிறிய கேரக்டர்களில் அதுல்யா ரவி நடித்திருந்தார். இந்நிலையில் அதிகமான பட வாய்ப்புகள் இல்லாததால் instagram உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அடுத்தடுத்து ஃபோட்டோ ஷூட்களை எடுத்து அதை வெளியிட்டு அதன் மூலம் வாய்ப்புகளை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் கோவையில் அதுல்யா ரவி தங்கியுள்ள வீட்டில் நடந்துள்ள திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடவள்ளி பகுதியில் அதுல்யா ரவி தன்னுடைய தாயார் விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார்.

பணிப்பெண் கைவரிசை: அவரது வீட்டில் செல்வி என்பவர் நீண்ட காலங்களாக பணிப்பெண்ணாக பணியாற்றி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பீரோவில் இருந்த நகைகள், பணங்கள் திருடு போவதாக விஜயலட்சுமிக்கு சந்தேகம் வந்த சூழலில் தொடர்ந்து சரியாக தெரியாமல் புகார் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு அதுல்யா ரவியின் பாஸ்போர்ட் மற்றும் சிறிது பணம் திருட்டு போயியுள்ளது. இதையடுத்தே இந்த திருட்டு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் அதுல்யா புகார் கொடுத்துள்ளார்.
சிசிடிவி காட்சிகள்: இதையடுத்து சந்தேகத்தின் பேரில் பணிப்பெண் செல்வி மற்றும் அவரது தோழியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பணம் மற்றும் நகைகளை அதிகமாக எடுத்தால் தெரிந்து விடும் என்பதற்காக சிறிது சிறிதாக எடுத்ததாகவும் தெரியாமல் பாஸ்போர்ட்டை எடுத்ததாகவும் செல்வி தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதுல்யா ரவியின் வீட்டில் இருந்த பீரோவில் பணிப்பெண் திருடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
பகீர் காட்சிகள்: அதில் பீரோவை திறந்து செல்வி பணம் மற்றும் பாஸ்போர்ட்டை எடுத்ததை பார்க்க முடிந்தது. தொடர்ந்து செல்வி பல நாட்களாக இந்த திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். பணத்தை எடுத்து அவர் மாட்டாமல் இருந்த சூழலில் பாஸ்போர்ட் என்று தெரியாமல் எடுத்து அவர் தற்போது சிக்கியுள்ளார். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











