»   »  திரிஷா... சமந்தா... ஹன்சிகா பிட்னஸ் ரகசியம் தெரியுமா?

திரிஷா... சமந்தா... ஹன்சிகா பிட்னஸ் ரகசியம் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த நடிகைகள் மட்டும் எப்படி அப்படியோ இருக்காங்க... சும்மா தக தக தகன்னு இருக்க காரணம் என்ன? என்ன சாப்பிடுறாங்க. கூடுதலா பயிற்சி ஏதாவது செய்றாங்களா என்பது சராசரி பெண்களின் கேள்வி.

அவ்ளோ குண்டா இருந்த ஹன்சிகா எப்படி இப்படி ஒல்லி ஆனாங்க? நம்ம சென்னை பெண் சமந்தா எப்படி பளபளன்னு இருக்காங்க? திருமணம் நிச்சயத்திற்குப் பின்னர் திரிஷாவின் அழகு கூடி போயிருக்குப்பா. இப்படி பலவித கேள்விகளை கேட்கின்றனர் அவரது ரசிகர்கள்.

திரிஷாவின் ரகசியம்

திரிஷாவின் ரகசியம்

திரிஷாவின் கூடுதல் அழகுக்கு எல்லாம் கல்யாண களை என்று ஒரு பக்கம் கூறினாலும் தனது அழகு, பிட்னஸ்க்காக சில மெனக்கெடல்கள் அவசியம் என்பது திரிஷாவின் கருத்து.

அப்படி பார்த்து பார்த்து உடம்பை பாதுகாக்கப் போய்த்தான் தமிழ், தெலுங்கு சினிமா உலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

சூப்பர் பிரேக்பாஸ்ட்

சூப்பர் பிரேக்பாஸ்ட்

திரிஷா எப்பவுமே ஹெவியான ப்ரேக்பாஸ்ட் உடன் ஆரம்பிப்பாராம். ஆம்லேட், பராத்தா, தயிர் போன்றவை காலையில் சாப்பிட்டால் அன்றைய தினத்தை உற்சாகமாக தொடங்கலாம் என்கிறார்.

வைட்டமின் சி

வைட்டமின் சி

அதேபோல வைட்டமின் சி சத்துள்ள எலுமிச்சை, ஆரஞ்சு பழரச பானங்களை அடிக்கடி குடிப்பது சருமத்தை மினுமினுப்பாக வைத்திருக்கும் என்கிறார்.

கிரீன் டீ

கிரீன் டீ

ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் அதிகம் உள்ள கிரீன் டீ, மாதுளை ஜூஸ், அடிக்கடி தண்ணீர் அருந்துவதும் தன்னுடைய பிட்னெட் ரகசியம் என்கிறார்.

ஜிம் போகணும்

ஜிம் போகணும்

அது மட்டுமல்லாது ஜிம் போய் சில எளிமையான பயிற்சிகள்... யோகா போன்றவையும் திரிஷாவின் பிட்னெஸ்க்கு காரணம் என்கின்றனர்.

பிரியாணி ரசிகை

பிரியாணி ரசிகை

திரிஷா ஒரு அசைவப் பிரியை, சுவையான பிரியாணி கிடைத்து விட்டால் அதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டாராம். ஆனாலும் உடல் எடையில், ஒரு கிராம் அதிகரித்தால் கூட, அதை குறைத்து விட்டுத் தான், மறு வேலை பார்ப்பார். உடல் எடை அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக, அடுத்த நாள் முழுவதும், பட்டினி கிடந்து விடுவாராம்.

சமந்தா ரகசியம்

சமந்தா ரகசியம்

அழகுப் புயல் சமந்தா தனது உடல் அழகைப் பாதுகாக்க ஒரு பயிற்சியாளரை வைத்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க பயிற்சி செய்வதன் மூலம் கூடுதலாக பத்து கிராம் எடை கூட கூடாது என்கிறார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

பாலிவுட் தொடங்கி கோலிவுட், டோலிவுட் என பரபரப்பாக இருக்கும் காஜல் அகர்வால் 18 வயதில் இருந்தே ஜிம் செல்லும் பழக்கத்தை வைத்திருக்கிறாராம்.

ஏரோபிக்ஸ் பயிற்சி

ஏரோபிக்ஸ் பயிற்சி

கரடுமுரடான பயிற்சி எல்லாம் இல்லை எளிமையான ஏரோபிக்ஸ் வகை பயிற்சிதான் செட் ஆகும் என்கிறார். அதோடு வாரம் மூன்று நாள் யோகா செய்வாராம். தினசரி சூர்யநமஸ்காரம் என்னை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது என்கிறார் காஜல் அகர்வால்.

ஹன்சிகா

ஹன்சிகா

பார்பி கேர்ள் ஹன்சிகாவின் அழகு, உடல் கட்டமைப்புக்கு தற்போது கடுமையான டயட்டை பின்பற்றுகிறார்.

ஒருநாளைக்கு 8 முறை சிறுக சிறுக சாப்பிடுகிறாராம். வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு அடிமை என்கிறார். ராஜ்மா சாவல், காலை நேரத்தில் ஆப்பிள், ஒரு டம்ளர் பால். மதியம் சப்பாத்தி, டால், யோகர்டு, மாலையிலே இரவு உணவை முடித்து விடுவாராம். லேட் நைட் டின்னருக்கு நோ சொல்லிவிடுகிறார் திரிஷா.

ஜிம் எக்சர்சைஸ்

ஜிம் எக்சர்சைஸ்

என்னதான் சாப்பிட்டாலும் உடம்பு பிட்னெஸ்க்காக தினசரி 2 மணிநேரம் ஜிம் சென்று செலவிடுகிறார் ஹன்சிகா. அதனால்தான் பப்ளி கேர்ள் ஆக இருந்த ஹன்சிகா இப்போது இஞ்சி இடுப்பழகியாக இருக்கிறார். உடற்பயிற்சி, யோகா, மெடிடேசன் அனைத்தும் முடிந்த பின்னர் மில்க் ஷேக் சாப்பிடுவாராம்.


என்ன ரசிகர்களே உங்களின் மனம் கவர்ந்த நடிகைகளின் பிட்னெஸ் ரகசியம் தெரிஞ்சு போச்சா?

English summary
Trisha, Samantha and Hanshika are working hard to maintain good figure for a steady career and worked really hard to remove the extra fat.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil