அய்யோ, என்னால் ஜீரணிக்க முடியல, தாங்க முடியல: புலம்பித் தள்ளும் ஸ்ரீ ரெட்டி

By Siva

சென்னை: என்னால் ஜீரணிக்க முடியவில்லை, தாங்க முடியவில்லை என்று நடிகை ஸ்ரீ ரெட்டி ட்வீட்டியுள்ளார்.

நடிகரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் பலியானார். தந்தையின் உடலை வாங்க மருத்துவமனைக்கு சென்ற நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். கதறி அழுததை பார்த்து ரசிகர்களுக்கு அழுகை வந்துவிட்டது.

இந்நிலையில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ ரெட்டி

நந்தமுரி ஹரிகிருஷ்ணா காருவின் ஆத்மா சாந்தி அடையட்டும். இது எனக்கு பெரிய அதிர்ச்சி. இந்த செய்தியை ஜீரணிக்கவே முடியவில்லை. தாரக் காரு மற்றும் குடும்பத்தாருக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி ட்வீட்டியுள்ளார். #RIPHariKrishnaGaru

நாகர்ஜுனா

பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது என்று அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூறினார். தற்போது அவர் இறந்துவிட்டார். உங்களை மிஸ் பண்ணுகிறேன் அண்ணா என்று நடிகர் நாகர்ஜுனா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இன்று நாகர்ஜுனாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராதிகா

நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் திடீர் மறைவு செய்தியை அறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபு

ஹரிகிருஷ்ணாவின் மரண செய்தி அறிந்து மகேஷ் பாபு கவலை அடைந்துள்ளார். தம்பி ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார் மகேஷ் பாபு.

சமந்தா

ஹரிகிருஷ்ணாவின் மரண செய்தி அறிந்து சமந்தா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X