Chaithra : ஜிம்மில் வேகமாக ஸ்கிப்பிங் செய்யும் சைத்ரா ஆச்சர்.. அடடே வீடியோவையே இறக்கிட்டாங்கப்பா
சென்னை: தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் வந்து போனாலும், ஒரு சிலரே தங்களின் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடிப்பார்கள். அந்த வரிசையில், தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகவும், இயக்குநர்களின் நம்பிக்கைக்குரிய தேர்வாகவும் மாறியிருக்கிறார் நடிகை சைத்ரா ஆர்ச்சர். இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் ஜாலியாகவும் செம்ம சீரியஸாகவும் ஸ்கிப்பிங் செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட சைத்ரா, மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர். ஆரம்பத்தில் விளம்பரப் படங்கள் மற்றும் கன்னடத் திரையுலகில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு, தமிழ் சினிமா ஒரு சிவப்பு கம்பள வரவேற்பைக் கொடுத்துள்ளது. வெறும் கிளாமர் பொம்மையாக இல்லாமல், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது தான் இவரது ப்ளஸ் பாயிண்ட்.

சமீபத்தில் தமிழில் வெளியான இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, முன்னணி நட்சத்திரங்களுடன் சைத்ரா இணைந்து நடித்த படங்கள் கமர்ஷியல் ரீதியாகவும், கதைக் களத்தின் ரீதியாகவும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன. சைத்ரா வெறும் அழகை மட்டுமே நம்பி வராமல், ஒவ்வொரு ஃபிரேமிலும் தனது நடிப்புத் திறமையை நிரூபித்து வருகிறார். தமிழ் சினிமாவின் அடுத்த டாப் நடிகைக்கான அத்தனை தகுதிகளும் இவருக்கு இருக்கிறது" என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திறமைசாலிகளின் தேர்வு: கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மை லார்ட் படத்தின் கதைக்களம், அதில் இவரது நடிப்பு என பலவும் இவருக்கு விருதுகளை பெற்றுத் தரும் என்று பாராட்டப்பட்டது. தனுஷ் நடிப்பில் வெளியான படமான கர படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்த போது கூட, மை லார்டு படத்திலும் இது போன்ற கெட்-அப் தான் என்று கூற, அதன் பின்னர் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். ஆனால் தனுஷ் மாதிரியான தேசிய விருது பெற்ற நடிகர், விக்னேஷ் ராஜா மாதிரியான தேசிய விருது பெற்ற இயக்குநர் என திறமைசாலிகளின் தேர்வாக சைத்ரா ஆச்சர் இருக்கிறார்.

மீசையை முறுக்கு 2: ரசிகர்களுக்கு ஒரு முழு சினிமா விருந்தைக் கொடுத்து வரும் சைத்ரா ஆர்ச்சரின் மார்க்கெட் கிராஃப் தற்போது உச்சத்தில் உள்ளது. இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள தமிழ் படம் என்றால் அது மீசையை முறுக்கு 2 படம் தான்.
ஸ்கிப்பிங்: தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் ஜாலியாகவும் செம்ம சீரியஸாகவும் ஸ்கிப்பிங் செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அந்த ஸ்கிப்பிங் கயிறு இவரது காலில் பட்டு, பட்டு தொடர்ந்து ஸ்கிப்பிங் செய்ய முடியாமல் போக, அதன் பின்னர், ரீ சார்ட் என்பது போல, மீண்டும் செம்ம ஸ்பீடாக ஸ்கிப்பிங் செய்கிறார். இறுதியாக அவரது ஃபேவரைட் பீஸ் சிம்பிளில் ஒரு செல்ஃபியுடன் வீடியோவை முடித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், சைத்ராவின் ஃபிட்னஸுக்கு ஜிம் தான் ரொம்பவும் முக்கிய காரணம் போல என்று பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications