சேலைக்கு YES.. ஜாக்கெட்டுக்கு NO.. சைத்ரா ஆச்சரின் கட்டுக்கடங்காத கிளாமர்.. கேப்ஷனைப் பாருங்க பசங்களா!

சென்னை: சமூக வலைத்தளங்களில் எப்போதுமே நடிகைகளின் கிளாமர் புகைப்படங்களுக்குப் பஞ்சமிருக்காது. அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கம் வந்துவிட்டால், ரசிகர்களை எப்படித் தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதில் இப்போதைய நடிகைகள் படு கில்லாடிகளாக இருக்கிறார்கள். அந்த வகையில், தனது அசாத்திய திறமையாலும், கச்சிதமான அழகாலும் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த நடிகை சைத்ரா ஆச்சர், தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

வழக்கமாக நடிகைகள் மாடர்ன் உடைகளில் தான் கிளாமர் காட்டுவார்கள். ஆனால், சைத்ரா ஆச்சர் இந்த முறை கையாண்டிருக்கும் பாணி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அசைத்துப் பார்த்துள்ளது.

பாரம்பரிய உடையில் படு கிளாமர்: அப்படி என்ன ஸ்பெஷல் அந்தப் புகைப்படங்களில்? சைத்ரா ஆச்சர் பாரம்பரியமிக்க சேலையை உடுத்தியுள்ளார். ஆனால், அதற்கு ஜாக்கெட் (Blouse) அணியாமல், முற்றிலும் மாறுபட்ட கோணத்தில், அதீத கிளாமருடன் போஸ் கொடுத்துள்ளார். சேலையின் நேர்த்தியையும், தன் அழகையும் ஒன்றுசேரக் காட்டி அவர் வெளியிட்டுள்ள இந்த ஹாட் புகைப்படங்கள், ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. திறமையான நடிகையாக அறியப்பட்ட சைத்ரா, இந்த அளவுக்குக் கிளாமரில் இறங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

Chaitra Achar s Saree Look Goes Viral Actress Turns Heads With Bold Traditional Fashion Statement
Photo Credit:

லைக்குகளைக் குவிக்கும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள்: இன்ஸ்டாகிராமில் சைத்ரா ஆர்ச்சருக்கு ஏகப்பட்ட ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அவர் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவியத் தொடங்கிவிட்டன.

ரசிகர்களின் ரியாக்‌ஷன்: "பாரம்பரிய உடையில் இப்படியொரு கவர்ச்சியா?", "இதயத்தை திருடிவிட்டீர்கள் சைத்ரா!" என ரசிகர்கள் தங்களின் வர்ணனைகளால் கமெண்ட் பாக்ஸை நிரப்பி வருகின்றனர்.

தொடரும் கிளாமர் : சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரங்களில் திறமையான நடிகை என்று பெயரெடுத்த சைத்ரா, சமீபகாலமாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Chaitra Achar s Saree Look Goes Viral Actress Turns Heads With Bold Traditional Fashion Statement
Photo Credit:

கேப்ஷனைப் பாருங்க: இதற்கு முன்பும் பல மாடர்ன் உடைகளில் ரசிகர்களைக் கவர்ந்திருந்தாலும், இந்த "சேலை உண்டு... ஜாக்கெட் இல்லை" காம்பினேஷன் தான் இப்போது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும், இணைய உலகிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காகவா அல்லது ரசிகர்களைத் தக்க வைக்கவா இந்த அதிரடி மாற்றம் எனப் பலரும் பேசி வந்தாலும், சைத்ராவின் இந்த கிளாமர் அவதாரம் சமூக வலைத்தளங்களைச் சூடேற்றியுள்ளது மறுக்க முடியாத உண்மை. இவரது நடிப்பில் தமிழில் கடைசியாக மை லார்டு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சைத்ரா ஆச்சர் தனது இந்த புகைப்படங்களுக்கு பெண் என்று தமிழில் கேப்ஷன் இட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X