எஸ்.ஜே சூர்யா உடன் ஜோடி சேரும் சாந்தினி - திருப்புமுனையை தருமா

சென்னை: நடிகர் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் சாந்தினி கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படம் சாந்தினிக்கு சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருப்பதோடு, அவரது நடிப்புத் திறனை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும், அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு.

 Chandini Acts in Radhamohan Movie with S.J.Surya

நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சாந்தினிக்கு தனி இடம் உண்டு.

சித்து +2 வில் திரைக்கதை மன்னன் இயக்குநர் பாக்யராஜால் அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான ராஜா ரங்குஸ்கி வரை இவரின் கலைப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

ராஜா ரங்குஸ்கி படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த வில்லி கதாபாத்திரம் பலரின் புருவங்களை உயர்த்தியது. அதோடு இவருக்கு நடிப்பில் பெரிய நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது.

இந்நிலையில், திடீரென திருமணம் செய்து கொண்டதால், சினிமாவை விட்டு விலகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து சினிமா மட்டுமின்றி சின்னத்திரை, மற்றும் வெப் சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

 Chandini Acts in Radhamohan Movie with S.J.Surya

இவரது நடிப்பை கண்டு வியந்த இயக்குநர் பாலாஜி சக்திவேல், இவரை அணுகி ஒரு கதை சொல்ல, அந்த கதை சாந்தினிக்கு மிகவும் பிடித்த விட, உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அந்த படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. மேலும் மென்மையான உணர்வுகளை அழகான திரைப்படமாக்கும் ராதாமோகன், சாந்தினியின் நடிப்புத் திறனை கவனித்து தனது புதிய படத்தில் நடிக்க அழைத்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சாந்தினி கதாநாயகியாக நடிக்கிறார்.

 Chandini Acts in Radhamohan Movie with S.J.Surya

சாந்தினியின் படங்கள் வரிசையில், இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு புறம் பாலாஜி சக்திவேல் படம், மறுபுறம் ராதாமோகன் படம் என சாந்தினியின் வரிசையான படங்கள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

ஒரு நாயகியாக சினிமாவில் நீண்டகாலம் சாந்தினி நிலைத்து வருவதற்கு அவரது திறமை மட்டுமே பிரதான காரணம். மேற்கூறிய இரண்டு படங்கள் தனது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களாக இருக்கும் என்கிறார் சாந்தினி.

இவ்விரண்டு படங்களும் சாந்தினிக்கு சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களாக இருப்பதோடு, அவரது நடிப்புத் திறனை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X