அபார்ஷன் செய்தாரா?.. தவெக எம்எல்ஏ மீது நடிகை சாந்தினி பரபரப்பு புகார்!
சென்னை: அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் டாக்டர் டி. அருண்குமார் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இருக்கும் நிலையில், தவெக எம்எல்ஏவான அருண் மீது நடிகை சாந்தினி பரபரப்பு குற்றச்சாட்டை ஒன்றை முன்வைத்து பேசியுள்ளார். அவரது பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சாந்தினி வெளியிட்டு இருக்கும் வீடியோவில், டாக்டர் என சொல்லிக்கொள்ளும் அருண்குமார் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் உறவினர் அதோட மட்டுமல்லாமல் மெடிக்கல் பாக்சிலிட்டியினுடைய இன்சார்ஜ் ஆகவும் இருக்கிறார். அவர் தன்னை மருத்துவராக சொல்லிக் கொள்கிறார். ஆனால், அது எந்த அளவுக்கு உண்மை எனக்கு தெரியவில்லை. நான் 2021 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மீது புகார் கொடுத்து இருந்தேன். அந்த புகாரின் இந்த டாக்டர் தான் முக்கியமான குற்றவாளியாக அவர் தான் எனக்கு ஆபாஷன் செய்தார்.

நடிகை சாந்தினி: தவெக எப்பொழுதுமே பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என சொல்கிறார்கள். இந்த மருத்துவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவரால் அனைத்து பெண்களுக்கும் பாதிப்பு தான் என கடுமையாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டை நடிகை சாந்தினி அருண்குமார் வேட்பாளராக அறிவித்த போதே கூறியிருந்தார். அப்படி ஒரு குற்றச்சாட்டு இருந்தும் அருண் அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
கருவை கலைத்தார்: இந்த குற்றச்சாட்டு தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் தவெக கட்சிக்கு எதிராக இப்படியான குற்றச்சாட்டு எழுந்திருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது. நடிகை சாந்தினி கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். அதை நம்பி நான் அவருடன் 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். அவருடன் நான் வாழ்ந்த காலத்தில் 3 முறை கருவுற்றேன். ஆனால், என்னை வலுக்கட்டாயமாக கருவை செய்தார். தற்போது என்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். அதோடு, எனது புகைப்படங்களை சமூகஊடகங்களில் வெளியிடுவேன் என மிரட்டுவதாக புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications