கவிதை எழுதும் சாந்தினி... ட்விட்டரில் நியூ போஸ்ட்
சென்னை : டிவிட்டரில் பிசியாக இருக்கு சாந்தினி புதிய புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார். அதில், நீண்ட குளியல், சத்தமான இசை ஆழ்ந்த சிந்தனை இதுதான் தற்போதைய நிகழ்வு என்று கவிதையும் எழுதி உள்ளார்.
பாக்யராஜ் இயக்கத்தில் உருவான சித்து +2 படத்தின் மூலம் அறிமுகமானவர் சாந்தினி. அதன் பிறகு நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடித்திருந்தார். சென்னையில் படிப்பை முடித்த சாந்தினி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அந்த நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த பாக்யராஜ் மூலம் அவரிடம் வாய்ப்பு கேட்டார் சாந்தினி. அவர் வாய்ப்பு தந்ததை அடுத்து தமிழ் சினிமாவில் நடிகையானார் . வில் அம்பு படத்தில் ஓரளவுக்கு பேசப்படும் கதாநாயகியானார். படத்தில் இரண்டாம் கதாநாயகிதான் என்றாலும் படம் முழுக்க இவர் நடித்து இருப்பார்.

பிசியாக இருக்கும் சாந்தினி ட்விட்டரில் அவ்போது தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். தற்போது பிங்க் நிற ஆடையில் சில புகைப்படங்களை பதிவேற்றி அதில் நீண்ட குளியல் சத்தமான இசை ஆழ்ந்த சிந்தனை இதுதான் தற்போதைய நிகழ்வு என்று அழகான கவிதையும் கூறியிருக்கிறார் சாந்தினி.

சாந்தினிக்கு கடந்த ஆண்டு நந்தா எனும் நடன இயக்குனரை மணந்தார். இவர்கள் இருவரும் சுமார் 9 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கடந்த வருடம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. தமிழில் பிஸியாக நடித்து வரும் சாந்தினி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தாழம்பூ எனும் நெடுந்தொடரிலும் நடித்து வருகிறார் .

வில் அம்பு படத்திற்கு பிறகு காதல் முன்னேற்றக் கழகம் என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது, நான் அவளை சந்தித்த போது என்ற படம் வெளியாக உள்ளது. இவருக்கு தற்போது 10 படங்களை கை வசம் உள்ளன. சாந்தினி தெலுங்கில் இதுவரை 4 படங்களில் நடித்து இருக்கிறார்



Click it and Unblock the Notifications











