'இரண்டாம் குத்து' டீசர் பார்த்தீங்களா? 'இருட்டு அறையில்' நடிகையிடம் ஃபேன்ஸ் எடக்கு மடக்கு கேள்வி!
சென்னை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்த நடிகையின்,. லேட்டஸ்ட் போட்டோ ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இந்திய வம்சாவளி நடிகை, சந்திரிக்கா ரவி. பிரபல மாடல்.
இப்போது அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார்.

சந்திரிகா ரவி
இவர் அப்பா மலையாளம், அம்மா தமிழ். ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் படிப்பை முடித்த சந்திரிகா, நியூயார்க் பிலிம் அகாடமியில் நடிப்புக் கற்றவர். அமெரிக்காவில் மாடலிங் கேரியரை தொடங்கிய அவர், பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்தார். 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பேய் கேரக்டரில்
கவுதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் இது. சந்திரிகா ரவியுடன் வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் இணைந்து இந்தப் படத்தில் நடித்திருந்தனர். முக்கியமான பேய் கேரக்டரில் நடித்திருந்தார் சந்திரிகா. அடுத்து நகுல் நடித்த செய் என்ற படத்தில் நான்சி என்ற கேரக்டரில் நடித்தார்.

அமெரிக்கா
இந்தப் படம் கவனிக்கப்படவில்லை. பிறகு உன் காதல் இருந்தால் என்ற படத்தில் ஶ்ரீகாந்த் ஜோடியாக நடித்து வந்தார். இதன் ஷூட்டிங் முடியவில்லை. பிறகு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் அமெரிக்கா சென்றுவிட்ட சந்திரிகா, மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

மாடர்ன் சில்க்
இவர், சில்க் ஸ்மிதாவை ஞாபகப்படுத்துவது போல இருப்பதால், தமிழ் ரசிகர்கள் மாடர்ன் சில்க் என்கின்றனர் இவரை. லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் சந்திரிகா, தினமும் தனது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் அள்ளிவிட்டு ரசிகர்களை தெறிக்கவிட்டு வருகிறார்.

வேற லெவல் ஹாட்
அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது வேற லெவல் ஹாட் போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், இப்போது அடக்க ஒடுக்கமான ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். இதை அவரிடம் எதிர்பார்க்காத நெட்டிசன்ஸ், இது உண்மையிலேயே நீங்கதானா? என்று கேட்டுள்ளனர்.

கிளாமர் பொண்ணு
ஒருவர், நான் பார்த்ததிலேயே நீங்கதான் சூப்பரான கிளாமர் பொண்ணு. செம, வேற லெவலா இருக்கீங்க என்று வழிந்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் சந்திரிகா. இன்னொருவர், இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் அடுத்த பாகத்தில் ஏன் நடிக்கலை? என்று கேட்டுள்ளார்.

இரண்டாம் குத்து டீசர்
சில குசும்புகார நெட்டிசன்ஸ், இரண்டாம் குத்து டீசர் பார்த்தீங்களா? எப்படியிருக்கு என்று கேட்டுள்ளனர். இது பழைய போட்டோதானே? என்று சிலர் கேட்க, தமிழ் சினிமால உங்களை பார்க்க முடியலையே என்று சிலர் வருத்தப்பட்டுள்ளனர். இன்னொருவர் ஏஞ்சலினா ஜோலி மாதிரியே இருக்கீங்க? என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











