ஆஹா.. டூமச்சால்ல இருக்கு.. பரவசத்துக் கூட்டிட்டு போகணும்ல.. வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோ!
சென்னை: பிரபல நடிகை, தன்னை பரவசத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
இன்ஸ்டாவை இஷ்டத்துக்குச் சூடேற்றும் நடிகைகளில் ஒருவர் சந்திரிகா ரவி. நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கிளாமர் போஸ்களில் கிறங்கடிப்பார்.
ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இந்திய வம்சாவளி நடிகையான இவர், பிரபல மாடல்.

லாஸ் ஏஞ்சல்ஸ்
இந்த கொரோனா காலத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வரும் இவர், தினமும் தனது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை அள்ளிவிட்டு ரசிகர்களை தெறிக்கவிட்டு வருகிறார். அதற்காகவே அவரது பக்கத்துக்கு ஏகப்பட்ட பாலோயர்கள். தன்மான தமிழ் ரசிகர்களும் எக்கச்சக்கம். இப்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அழைத்துச் செல்லுங்கள்
இந்தப் போட்டோவுக்கு கேப்ஷனாக, என்னை பரவசத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார். போதாதா, வந்து விழுந்திருக்கிறது வகைதொகையான கமென்ட்களும் லைக்ஸ்களும். இந்த லீவு நாளை மொத்தமா கொல்றீங்களே என்று ஏக்கமாக சிலர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஒருவர், மூச்சடைக்க வைப்பது என்பதற்கு உங்கள் பெயரை அகராதியில் சேர்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

மீண்டும் உயிர்ப்பிக்கிறேன்
இந்த நெட்டிசனின் கமென்ட்டுக்கு, வாவ் நன்றி என்று கூறியிருக்கிறார் சந்திரிகா. இன்னொருவர் இந்தப் போட்டோ பார்த்து நான் போய் சேர்ந்து விட்டேன் என்று கூற, உங்களை நான் மீண்டும் உயிர்ப்பிக்கிறேன் என்று கூறியிருக்கிறார் இவர். இந்த லுக்கில் சுமார் ஆயிரம் பேரை கொல்கிறீர்கள் என்று சிலர் சொல்ல, இன்னொருவர் வேற லெவல்ல இருக்கீங்க என்று கூறியிருக்கிறார்.

சூரியனை விட ஹாட்
அடுத்து, தமிழ்ப் படங்கள்ல பார்த்து நாளாச்சே.. அடுத்து என்ன படம் பண்றீங்க? என்று சிலர் கேட்க, வேறு சிலர், சூரியனை விட சூடா இருக்கீங்களே, எப்படி? என்று கேட்டுள்ளனர். இன்னும் சில ரசிகர்கள் அவர் அழகை கண்டபடி வர்ணித்துள்ளனர். நடிகை சந்திரிகா ரவியின் இந்த கிக்கான புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

பேய் கேரக்டர்
தமிழில், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். கவுதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது. வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இதில், முக்கியமான பேய் கேரக்டரில் நடித்திருந்தார், நடிகை சந்திரிகா ரவி. அடுத்து நகுல் நடித்த செய் என்ற படத்தில் நான்சி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

மாடர்ன் சில்க்
இப்போது, உன் காதல் இருந்தால் என்ற படத்தில் ஶ்ரீகாந்த் ஜோடியாக நடித்து வருகிறார். ஹாசிம் மரைக்காயர் இயக்கும் இந்தப் படத்தின் மலையாள நடிகர் மக்பூல் சல்மான் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. நடிகை சந்திரிகா ரவி, அசப்பில் கிளாமர் குயின் சில்க் ஸ்மிதாவை ஞாபகப்படுத்துவது போல இருப்பதால், தமிழ் ரசிகர்கள் மாடர்ன் சில்க் என்கின்றனர் இவரை.


Click it and Unblock the Notifications











