இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் அடுத்த ஆட்டம்.. ஸ்ரீகாந்த் உடன் ஜோடி போட்ட சந்திரிகா ரவி!
சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் 'உன் காதல் இருந்தால்' படம் வரும் பிப்ரவரி 28ம் தேதி திரைக்கு வருகிறது.
இதுகுறித்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சந்திரிகா ரவி தற்போது வெளியிட்டுள்ளார்.
மரிகார் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ஹசீம் மரிக்கார் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி, மக்புல் சல்மான் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இருட்டறையில் முரட்டு பேய்
பிரபல மாடல் அழகியான சந்திரிகா ரவி, கடந்த 2018ம் ஆண்டு கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்து அசத்தி இருந்தார். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் அடல்ட் ஹாரர் காமெடி படமாக வெளியான இந்த படம் வசூலிலும் கல்லாக் கட்டியது.

மாடல் அழகி
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஸ்திரேலிய நடிகை சந்திரிகா ரவி, மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர், பல ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரேம்ப் வாக் செய்துள்ளார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை அடிக்கடி அதிர்ச்சி ஆக்குவார்.
சில்க் ஸ்மிதா
கருப்பு நிற கவர்ச்சி அழகியாக இருக்கும் சந்திரிகா ரவியை பார்க்கும் பலரும் மறைந்த முன்னாள் கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா போலவே உள்ளார் என்றும் கூறி வருகின்றனர். நடிகை சந்திரிகா ரவியை சில்க் ஸ்மிதா வெர்ஷன் என்றும் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
செம்ம செக்ஸி
நடிகை சந்திரிகா ரவி தனது சமூக வலைதள பக்கங்களில் செம்ம செக்ஸியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். இருட்டு அறை முரட்டு குத்து படத்தில் காம பேயாக நடித்து மிரட்டிய சந்திரிகா ரவி, தற்போது ஸ்ரீகாந்துடன் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
உன் காதல் இருந்தால்
கவலை வேண்டாம் படத்தில் வரும் "உன் காதல் இருந்தால் போதும்" பாடல் வரிகளை கொண்டு "உன் காதல் இருந்தால்" என்ற டைட்டிலில் ஹசீம் மரிக்கர் படம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார் சந்திரிகா ரவி. வரும் பிப்ரவரி 28ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











