Silk Smitha: யப்பா இன்னொரு சில்க் ரெடி.. இருட்டு அறையில் முரட்டுக் குத்து பட நடிகைக்கு ஜாக்பாட்!
சென்னை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் பேயாக நடித்த நடிகை சந்திரிகா ரவி சில்க் ஸ்மிதாவின் பயோபிக்கில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி குடும்பத்தில் பிறந்த சந்திரிகா ரவி 2012ம் ஆண்டு மிஸ் ஆஸ்திரேலிய அழகிப் போட்டியில் இறுதி வரை சென்றார்.

மாடலிங் துறையில் அவருக்கு இருந்த ஆர்வம் அப்படியே கோலிவுட் பக்கம் அவரை கூட்டிக் கொண்டு வந்தது. முதல் படத்திலேயே தாராளமாக நடிக்க ஒப்புக் கொண்ட நடிகைக்கு தொடர்ந்து அதே போன்ற கிளாமர் கதாபாத்திரங்களே கிடைத்து வருகின்றன.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து: சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் கிளாமர் பேயாக நடித்து ரசிகர்களை கிறங்கடித்து இருந்தார். அதே படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போதும் இவர் தான் அந்த ரோலில் நடித்திருந்தார்.
கவர்ச்சி நடிகை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தைத் தொடர்ந்து உன் காதல் இருந்தால், வீர சிம்ஹா ரெட்டி படத்தில் குத்தாட்டம் ஆடியிருந்தார். பாலிவுட் டு ஹாலிவுட் எனும் இங்கிலீஷ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், புதிதாக சில்க் ஸ்மிதா பயோபிக்கிலும் அவர் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சில்க் ஸ்மிதா பயோபிக்: ஜெயராம் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இதில், நடிகை சில்க் ஸ்மிதாவாக சந்திரிகா ரவி நடிக்க உள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் உடன் இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகை சில்க் ஸ்மிதா 1960ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி பிறந்தார். 1996ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி இளம் வயதில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்னமும் ரசிகர்களின் கனவுக் கன்னியாக சில்க் ஸ்மிதா ரசிகர்கள் நெஞ்சில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வித்யா பாலன் டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்திருப்பார். மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதாவை ரீக்ரியேட் செய்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











