»   »  10ம் கிளாஸ் சரண்யா காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக வந்து உங்க லவ்வுக்கு நாங்க தான் ஊறுகாயா என்று கேள்வி கேட்டு அசத்தி விட்டுப் போன சரண்யா இப்போது தெலுங்கில் குத்தாட்ட குமரிகள் ரேஞ்சுக்கு கிளாமரில் புகுந்து விளையாடி வருகிறார். காதல் படத்திற்காக ஹீரோயினைத் தேடி இயக்குனர்கள் ஷங்கரும், பாலாஜி சக்திவேலும் அலைந்து கொண்டிருந்தபோது மேக்கப் டெஸ்டுக்கு வந்து போனவர் சரண்யா. பலரையும் பரிசீலித்த பின்னர் சரண்யாவைத் தான் ஹீரோயினாக புக் செய்தார் பாலாஜி சக்திவேல். அவர் செலக்ட் ஆன பிறகுதான் சந்தியா கண்ணில் சிக்க, சரண்யாவுக்குப் பதில் சந்தியாவை ஹீரோயினாக்கினார். இருந்தாலும் சரண்யா மனசு விட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக சந்தியாவின் தோழியாக நடிக்க வைத்தார் பாலாஜி. டொக்கு கண்ணாடியுடன், பரத்தை மதுரை பாஷையில் வாரி ரசிகர்களின் உள்ளங்களை அள்ளிச் சென்றார் சரண்யா. அத்தோடு பரத், சந்தியாவின் காதலுக்கு உடந்தையாக இருந்த காதலர்களின் வாழ்த்தையும் பெற்றார். முதல் படத்தில் இப்படி குட்டி ரோலில் வந்த சரண்யா இப்போது தனி நாயகி. தமிழில் அவர் நடிக்க ஒரு படம் உருவாகி வருகிறது. தற்போது தெலுங்கிலும் (பாப்பா மணவாடாச்சே!

10ம் கிளாஸ் சரண்யா காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக வந்து உங்க லவ்வுக்கு நாங்க தான் ஊறுகாயா என்று கேள்வி கேட்டு அசத்தி விட்டுப் போன சரண்யா இப்போது தெலுங்கில் குத்தாட்ட குமரிகள் ரேஞ்சுக்கு கிளாமரில் புகுந்து விளையாடி வருகிறார். காதல் படத்திற்காக ஹீரோயினைத் தேடி இயக்குனர்கள் ஷங்கரும், பாலாஜி சக்திவேலும் அலைந்து கொண்டிருந்தபோது மேக்கப் டெஸ்டுக்கு வந்து போனவர் சரண்யா. பலரையும் பரிசீலித்த பின்னர் சரண்யாவைத் தான் ஹீரோயினாக புக் செய்தார் பாலாஜி சக்திவேல். அவர் செலக்ட் ஆன பிறகுதான் சந்தியா கண்ணில் சிக்க, சரண்யாவுக்குப் பதில் சந்தியாவை ஹீரோயினாக்கினார். இருந்தாலும் சரண்யா மனசு விட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக சந்தியாவின் தோழியாக நடிக்க வைத்தார் பாலாஜி. டொக்கு கண்ணாடியுடன், பரத்தை மதுரை பாஷையில் வாரி ரசிகர்களின் உள்ளங்களை அள்ளிச் சென்றார் சரண்யா. அத்தோடு பரத், சந்தியாவின் காதலுக்கு உடந்தையாக இருந்த காதலர்களின் வாழ்த்தையும் பெற்றார். முதல் படத்தில் இப்படி குட்டி ரோலில் வந்த சரண்யா இப்போது தனி நாயகி. தமிழில் அவர் நடிக்க ஒரு படம் உருவாகி வருகிறது. தற்போது தெலுங்கிலும் (பாப்பா மணவாடாச்சே!

Subscribe to Oneindia Tamil

காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக வந்து உங்க லவ்வுக்கு நாங்க தான் ஊறுகாயா என்று கேள்வி கேட்டு அசத்தி விட்டுப் போன சரண்யா இப்போது தெலுங்கில் குத்தாட்ட குமரிகள் ரேஞ்சுக்கு கிளாமரில் புகுந்து விளையாடி வருகிறார்.

காதல் படத்திற்காக ஹீரோயினைத் தேடி இயக்குனர்கள் ஷங்கரும், பாலாஜி சக்திவேலும் அலைந்து கொண்டிருந்தபோது மேக்கப் டெஸ்டுக்கு வந்து போனவர் சரண்யா.

பலரையும் பரிசீலித்த பின்னர் சரண்யாவைத் தான் ஹீரோயினாக புக் செய்தார் பாலாஜி சக்திவேல்.

அவர் செலக்ட் ஆன பிறகுதான் சந்தியா கண்ணில் சிக்க, சரண்யாவுக்குப் பதில் சந்தியாவை ஹீரோயினாக்கினார்.


இருந்தாலும் சரண்யா மனசு விட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக சந்தியாவின் தோழியாக நடிக்க வைத்தார் பாலாஜி.

டொக்கு கண்ணாடியுடன், பரத்தை மதுரை பாஷையில் வாரி ரசிகர்களின் உள்ளங்களை அள்ளிச் சென்றார் சரண்யா. அத்தோடு பரத், சந்தியாவின் காதலுக்கு உடந்தையாக இருந்த காதலர்களின் வாழ்த்தையும் பெற்றார்.

முதல் படத்தில் இப்படி குட்டி ரோலில் வந்த சரண்யா இப்போது தனி நாயகி. தமிழில் அவர் நடிக்க ஒரு படம் உருவாகி வருகிறது. தற்போது தெலுங்கிலும் (பாப்பா மணவாடாச்சே!) புகுந்துள்ளார் சரண்யா.

தெலுங்கில் அவர் ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் 10ம் கிளாஸ். இதுவும் ஒரு பள்ளிப் படம் தான். பத்தாம் வகுப்பு படிக்கும் பாப்பாவாக வருகிறார் சரண்யா.


அவருக்கு ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் மோதல் என சுவாரஸ்யமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.

படத்தின் முக்கிய மேட்டரே, அதில் இடம் பெறும் சரண்யாவின் இளமைக் கொண்டாட்டங்கள்தான். கிளாமரில் துள்ளி விளையாடியுள்ளாராம் சரண்யா. சில பாட்டுக்களை வெளிநாட்டுக்குப் பறந்து போய் சுட்டுத் தள்ளியுள்ளார்களாம்.

படத்தின் கதையை விட பாப்பாவின் கிளாமர்தான் டாப்புப்பா என்று கூறும் அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் சரண்யா.

காதலில் அடக்க ஒடுக்கமாக வந்து போனாலும், தெலுங்கு என்றதும் இதயத்தை தடுமாற வைக்கும் அளவுக்கு கிளாமரில் கலக்கியிருக்கும் சரண்யா, அதே நேரத்தில் தமிழ்ப் படங்களில் ஒவர் கிளாமர் காட்ட மாட்டேன் என்று கண்டிஷன் போடுகிறாராம்.


காதல், தெலுங்கிலும் டப் ஆகி அங்கும் வசூலை வாரிக் குவித்தது. இதனால் சந்தியாவைப் போல, சரண்யாவுக்கும் அங்கு அறிமுகம் கிடைத்து விட்டது.

இதனால் 10ம் கிளாஸ் படத்திற்கு ரசிகர்களிடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளதாம்.

10ம் கிளாஸை, தமிழிலும் வெளியிட்டு காசை அள்ள தயாரிப்பாளர் தரப்பு தயாராகி வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil