சார்மியின் 'லாடம்'

By Staff


தமிழுக்கு வந்து பின்னர் தெலுங்குக்குத் தாவிய சார்மி மறுபடியும் தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

Click here for more images

டி.ராஜேந்தரின் இயக்கத்தில் உருவான காதல் அழிவதில்லை மூலம் சிம்புவுக்கு ஜோடி போட்டு நாயகியாக அறிமுகமானார் சார்மி. சிக்கென சின்னப் பெண்ணாக இருந்த சார்மிக்கு தமிழில் சரிவர வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் சார்மியின் சார்மிங்கைப் பார்த்து தெலுங்குத் திரையுலகம் பச்சை மற்றும் சிவப்புக் கம்பளத்தை விரித்து சிறப்பாக வரவேற்றது.

தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் ஆக ராசியான நாயகியாக பெயரெடுத்தார் சார்மி. கிளாமரும், கலக்கலுமாக சார்மியின் தெலுங்கு வாழ்க்கை ரொம்பவே ரம்யமாக இருந்தது. மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார் சார்மி.

இந்த நிலையில் மீண்டும் தற்போது தமிழுக்குத் திரும்பி வருகிறார் சார்மி. கொக்கி படத்தைக் கொடுத்த பிரபு சாலமோன், சார்மியை மறுபடியும் தமிழுக்குக் கூட்டி வருகிறார்.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் சார்மி தமிழுக்குத் திரும்பி வருகிறார். படத்தின் பெயர் லாடம். படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பது ஒரு புதுமுகம்.

படத்தில் சார்மிக்கு பவர்ஃபுல் கேரக்டராம். அவரது கவர்ச்சியான உடல் வாகும், கிளாமரான முகமும் அந்த கேரக்டருக்கு ரொம்பவே பலம் சேர்க்குமாம். படத்தில் சார்மியின் கேரக்டர் என்ன தெரியுமா, பொம்பள தாதா வேடம். அவருக்கு எதிராக ஐந்து வில்லன் நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

சோழா பொன்னுரங்கம் படத்தைத் தயாரிக்கிறார். தேவாதான் இசை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கல்லூரியின் கதையை 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தார் பொன்னுரங்கம். தற்போது மறுபடியும் ஒரு இடைவெளிக்குப் பிறகு லாடம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

அக்டோபர் கடைசி வாரத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து விறுவிறுவென ஷூட் செய்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X