என் அப்பாவுக்கு வந்த நிலைமை.. ஷகிலா என்ன செஞ்சாங்க தெரியுமா?.. பிரபல ஹீரோயின் ஓபன்
சென்னை: நடிகை ஷர்மிளா மலையாள திரையுலகில் ஏகப்பட்ட படங்களில் நடித்தவர். தமிழிலும் நடித்திருக்கும் அவர் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். இரண்டு திருமணங்களை செய்து அதிலிருந்து வெளியே வந்த அவர் இப்போது சிங்கிளாக இருக்கிறார். இந்தச் சூழலில் நடிகை ஷகிலா குறித்து சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் அவர்.
தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியிருந்தாலும் மலையாள திரையுலகத்தில்தான் படு பிஸியாக நடித்துவந்தார் ஷர்மிளா. கோலிவுட்டிலும் ஓரளவுக்கு பிஸியாகத்தான் இருந்தார். ஒருகட்டத்தில் அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததை அடுத்து கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறினர். அதன்படி நான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் அவர். இதற்கிடையே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற அவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
ஷர்மிளா பேட்டி: இந்நிலையில் ஷர்மிளா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நானும் ஷகிலாவும் ஒரு கருத்து வேறுபாட்டின் மூலம்தான் அறிமுகமாகிக்கொண்டோம். ஆனால் அதற்கு பிறகு நாங்கள் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம் என்பது தனி கதை. நான் நடித்துக்கொண்டிருந்தபோது ஒரு பேட்டி கொடுத்தேன். அந்தப் பேட்டியில் ஷகிலா ஏன் இவ்வளவு மோசமாக நடிக்கிறாரோ என்று சொல்லிவிட்டேன். அந்தப் பேட்டி அவரது கவனத்துக்கும் சென்றது. உடனே அவரோ, அந்த நடிகையை அல்லா ஆசீர்வதிக்கட்டும் என்று எனக்கு பதிலடி கொடுத்தார். அதனையடுத்து மீண்டும் நான் ஒரு பேட்டி கொடுத்தேன். அதிலும் அவரை மோசமாகத்தான் பேசியிருந்தேன்.

பசி ஒரு பிரச்னை இல்லை: அதற்கு அவரோ, 'ஷர்மிளாவுக்கு பசியோ பணமோ ஒரு பிரச்னை இல்லை என நினைக்கிறேன். எனவே அவரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என பதிலளித்திருந்தார். ஷகிலாவின் அந்தப் பதிலை கேட்டதும் இந்தப் பெண் நமக்கு பதில் கொடுக்கிறாரா இல்லை அவமானப்படுத்துகிறாரா என்று தோன்றியது. அதுமட்டுமின்றி ஷகிலா என்ன சாமியாரா என்ற கேள்வியையும் அந்த சமயத்தில் நான் எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டேன். அப்படிப்பட்ட சமயத்தில்தான் நானும் அவரும் நேரில் சந்தித்துக்கொள்வதற்கான வாய்ப்பு ஒன்று எங்களுக்கு அமைந்தது.
எப்படி அந்த சந்திப்பு: நான் நடித்த படத்தின் ஷூட்டிங்கும், அவர் நடித்துக்கொண்டிருந்த ஒரு படத்தின் ஷூட்டிங்கும் ஒரே ஸ்டூடியோவில் நடந்தது. எங்களுக்கு பக்கத்து பக்கத்தில்தான் அறைகளை ஒதுக்கியிருந்தார்கள். அவர் பக்கத்து அறையில் இருப்பது எனக்கு தெரியாது. என்னுடைய ரூம் சாவி என்னிடம் இல்லாததால் நான் எனது ரூமுக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தேன். உடனே அங்கிருந்த சிலர் உங்கள் ரூம் சாவி வரும்வரை பக்கத்து ரூமில் அமர்ந்திருங்கள் என்று சொன்னார்கள். அவர்கள் சொல்படி நானும் அந்த ரூமுக்குள் சென்றேன். அங்கு ஷகிலாவும் இருந்தார். முதலில் அவரை பார்க்கையில் எனக்கு அடையாளமே தெரியவில்லை.
என் மேல் என்ன கோபம்: நான் ரூமுக்குள் சென்று அமர்ந்ததும் எனது எதிரே அமர்ந்த அவர், 'நான் ஷகிலா. என் மீது உங்களுக்கு அப்படி என்னதான் கோபம். எதற்காக எப்போது பார்த்தாலும் என்னை திட்டி பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என நேரடியாகவே கேட்டார். அதனைத் தொடர்ந்து தன்னுடைய குடும்ப சூழ்நிலை, எதற்காக அந்த மாதிரியான படங்களில் நடிக்கிறேன் என்பதையும் விவரித்தார். அப்போதுதான் அவருடைய கஷ்டம் செல்வாக்கினால் வந்த எனக்கு புரிந்தது. உடனடியாக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதற்கு பிறகு நானும் அவரும் நல்ல தோழிகளாகிவிட்டோம்.
ஷகிலா செய்தது: ஒருமுறை நான் கேரளாவில் ஷூட்டிங்கில் இருந்தேன். அந்த சமயம் பார்த்து என்னுடைய தந்தைக்கு திடீரென மாரடைப்பு வந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த விஷயம் ஷகிலாவுக்கு தெரிந்தது. உடனடியாக அவர்தான் அப்பாவுடன் மருத்துவமனைக்கு சென்று அப்பாவை அப்படி பார்த்துக்கொண்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











