வசூலை அள்ளிய ஐ ஸ்மார்ட் ஷங்கர் - சொகுசு கார் வாங்கிய சார்மி கவுர்

சென்னை: நடிகை சார்மியும் அவரது நண்பர் பூரி ஜெகன்நாத்தும் இணைந்து தயாரித்த ஐ ஸ்மார்ட் ஷங்கர் திரைப்படம் தெலுங்கில் வெளியாக சக்கைபோடு போட்டு வசூலிலும் சாதனை படைத்துள்ளது. அதோடு பாக்ஸ் ஆஃபிஸில் சூப்பர் பம்பர் வெற்றி பெற்றது. வசூலில் கிடைத்த லாபத்தில் அந்த படத்தின் மற்றும் தயாரிப்பாளர் சார்மியும் ஆடம்பர கார்களை வாங்கி கொண்டாடி வருகின்றனர்.

நடிகை சார்மி கடந்த 2002ஆம் ஆண்டில், காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதன் பின்பு காதல் கிசுகிசு படத்தில் நடித்தார். அதன் பின்பு தமிழ் சினிமா அவரை கண்டுகொள்ளாததால், தெலுங்கு படவுலகில் கரை ஒதுங்கினார். அங்கு இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Charmy Kaur and Puri Jagannadh buy luxury cars

சார்மி தெலுங்கில் நாகார்ஜுனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும், அங்கும் அவரால் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் அவ்வப்போது சிறிய வேடங்களிலும் நடித்து வந்தார். அதோடு தன் நண்பரோடு இணைந்து படத்தயாரிப்பு வேலையிலும் இறங்கிவிட்டார். தற்போது அவர் தயாரித்து வெளியிட்ட திரைப்படம் சக்கைபோடு போட்டு வசூலிலும் சாதனை படைத்துள்ளது.

ராம் பொத்தினேனி மற்றும் நாபா நடேஷ் நடிப்பில் சார்மி கவுர் மற்றும் பூரி ஜெகன்நாத் தயாரித்து இயக்கிய படம் ஐ ஸ்மார்ட் ஷங்கர். இப்படம் மூலம் பூரி ஜெகன்நாத் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஜூலை மாதம் ஆந்திராவில் வெளியாகி சக்கைபோடு போட்டது.

மேலும் இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதோடு பாக்ஸ் ஆஃபிஸில் பம்பர் வெற்றி பெற்றது இதனை அடுத்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் ஆடம்பர கார்களை அவர்களாகவே பரிசளித்து கொண்டனர்.

இயக்குனர் பூரி ஜெகன்நாத் ரேஞ்ச் ரோவர் வோக் எஸ்யூவியை காரையும், சார்மி பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் செடான் காரையும் வாங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நிர்வகிக்கும் நிறுவனமான பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் பேரில் இந்த இரண்டு ஆடம்பர கார்களும் வாங்கப்பட்டுள்ளன.

இருவரும் புதிய ஆடம்பர கார்களை வாங்கிய சந்தோஷத்தில் மிதக்கிறார்கள். அவர்களின் அளவில்லா மகிழ்ச்சி அவர்களின் முகத்திலேயே அப்பட்டமாக தெரிகிறது. மேலும் அவர்கள் தங்களது புதிய கார்களுடன் இருக்கும் ஒரு போட்டோ வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பூரி ஜெகன்நாத், தெலுங்கு முன்னணி ஹீரோ விஜய் தேவாரகொண்டாவை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 2020ல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக ஃபைட்டர் என்று பெயரிட்டுள்ளனர்.

படத்தின் டைட்டிலை பார்த்தாலே இதுவும் ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்பது தெரிகிறது. இந்த படமும் ஐ ஸ்மார்ட் ஷங்கர் திரைப்படம் போல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருகின்றனர்.

More from Filmibeat

Read more about: charmy சார்மி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X