ஹீரோயின்

By Staff

மன்மத ராணி சாயா சிங் நடிக்கும் அடுத்த படமான கவிதையிலும் அவருக்கு ஒரு டப்பாங்குத்து டான்ஸைவைத்துவிட்டார்கள்.

கவிதை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. ஆனால், சாயாவின் மன்மதராசா ரகளையாட்டத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து இந்தப் படத்திலும் அதே போன்ற பாடலை இப்போதுதயார் செய்து இடையில் செருகியிருக்கிறாக்கள்.

ஆனால், இதில் ஹீரோவுடன் ஆடாமல் சோலோவாக ஆடிக் கலக்கியிருக்கிறாராம் சாயா.

காத்தவராயா.. காத்தவராயா.. கட்டி அணைச்சுக்கடா.

பார்த்தது போதும் பார்த்து போதும்.. என்று போகிறது அந்த செம ரகளை பாடல்.

திருடா திருடிக்குப் பின் தமிழில் நிறைய வாய்ப்புக்கள் வந்தாலும் முன்பே ஒப்புக் கொண்ட கன்னட, மலையாளபடங்களை முடித்துக கொடுக்கப் போய்விட்டார் சாயா.

திரும்பி வந்து பார்த்தால் கவிதை படத்தைத் தவிர வேறு எல்லா சான்ஸ்களையும் மும்பை, தெலுங்கு இறக்குமதிநடிகைகள் கைப்பற்றிவிட்டதை அறிந்து நொந்து போனார்.

இதனால் இப்போது தமிழில் சான்சுக்கு அலைந்து கொண்டிருக்கிறார். அப்படிக் கஷ்டப்பட்ட அவர் வாங்கியசான்ஸ் தான் ஜெயசூர்யா. இதில் ஹீரோ அர்ஜூன்.

வழக்கமாக இவருக்கு எல்லா படத்திலும் குறைந்தபட்சம்இரண்டு ஹீரோயின்களாவது வேண்டும்.


இதனால் லைலாவை மெயின் ஹீரோயினாக்கிவிட்டு இன்னொரு ஹீரோயினுக்காக வேட்டை நடத்திக்கொண்டிருந்தவரை சாயா போய் பார்த்து அந்த செகண்ட் ஹீரோயின் சான்ஸை வாங்கியுள்ளார்.

இதில் நடித்துக் கொண்டே அடுத்தடுத்த படங்களுக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் சாயா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X