»   »  சோர்ந்து போன சாயா சிங்! விரக்தியில் வீழ்ந்து கிடக்கிறார் சாயா சிங்.நடிகர், நடிகர்களைப் பொருத்தவரை ஏதாவது ஒரு படம் அவர்களை தூக்கி விடும். ஆனால் சாயா சிங்குக்கோ ஒரே ஒரு பாட்டு பெரும்பெயரைப் பெற்றுத் தந்தது. மன்மத ராசா பாட்டுக்கு அவரும், தனுஷும் சேர்ந்து ஆடிய ஆட்டம் இன்னைக்கும் இளசுகளின் பேவரைட்பாட்டாக உள்ளது.திருடா திருடி படத்திற்குப் பிறகு சாயா சிங் பெரிய லெவலுக்கு வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தனுஷ் ராசி சாயா சிங் விஷயத்திலும் பலித்து விட்டது. அவருடைய முதல் ஜோடியான ஷெரீன் விஷயத்திலும் இப்படித்தான் பெரும் எதிர்பார்ப்புஎழுந்தது. ஆனால் ஷெரீன் எதிர்பாராத விதமாக பெரும் சரிவைச் சந்தித்தார். இப்போது விளம்பரப் படங்களில் கிளாமராக நடித்துபிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.அதே கதைதான் சாயா சிங் விஷயத்திலும் நடந்தது. திருடா திருடியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருக்கு ஒரு படமும் உருப்படியாகவரவில்லை. டப்பா படங்கள் ஒன்றிரண்டில் நடித்துக் கொண்டிருந்தார். இடையில் கன்னட மொழிப் படங்கள் சிலவற்றிலும் நடித்துப்பார்த்தார். தேறுவது போலத் தெரியவில்லை.இதனால் சற்றே டிராக் மாறலாம் என நினைத்து (அது குத்துப் பாட்டுக்கள் குதூகலமாக எக்காளமிட்டுக் கொண்டிருந்த காலம்!) விஜய்யுடன்மதுர படத்திலும், விக்ரமுடன் அருள் படத்திலும் ஒத்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்டார். பாட்டு பிரபலமானதே தவிர சாயா சிங்எடுபடவில்லை.ஒத்தப்பாட்டு வாய்ப்பும் இழந்து போன அவருக்கு விவேக்குடன் சொல்லி அடிப்பேன் படத்தில் ஜோடியாக (அதுவும் ரெண்டு ஹீரோயின்சப்ஜெக்ட்) நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்தப் படமும் ரொம்ப நாளாக தயாரிப்பில் இருக்கிறது. வருவது போலவும் தெரியவில்லை. இப்படியாக ஓடிக் கொண்டுள்ள சாயா சிங்கின் வாழ்க்கையில் லேசான மறுமலர்ச்சி வெளிச்சக் கீற்றென தெரிய ஆரம்பித்துள்ளது. அவரைநம்பி ஒரு படம் இப்போது உருவாகப் போகிறது. இதில் இரண்டு புதுமுகங்கள்தான் கதாநாயகர்கள்.உன்னால் ஒரு கவிதை என்று அப்படத்திற்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. வினோத் குமரன் (இவர்தான் படத் தயாரிப்பாளர்), பாலசூர்யா எனஇரண்டு புது ஹீரோக்கள் சாயாசிங்குடன் நடிக்கவுள்ளனர். காதல் புகழ் சுகுமார்தான் காமடி டிராக்கைக் கவனிக்கப் போகிறார். கூடவேபழைய ஹீரோயின்களான சீதா, இளவரசி ஆகியோரும் இருக்கிறார்கள்.கவி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் லேசு பாசாக கவர்ச்சியும் காட்ட உள்ளாராம் சாயா சிங். உன்னால் ஒரு கவிதை மூலமாவதுநமது வாழ்க்கையில் தென்றல் வீசுமா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளார் சாயா.

சோர்ந்து போன சாயா சிங்! விரக்தியில் வீழ்ந்து கிடக்கிறார் சாயா சிங்.நடிகர், நடிகர்களைப் பொருத்தவரை ஏதாவது ஒரு படம் அவர்களை தூக்கி விடும். ஆனால் சாயா சிங்குக்கோ ஒரே ஒரு பாட்டு பெரும்பெயரைப் பெற்றுத் தந்தது. மன்மத ராசா பாட்டுக்கு அவரும், தனுஷும் சேர்ந்து ஆடிய ஆட்டம் இன்னைக்கும் இளசுகளின் பேவரைட்பாட்டாக உள்ளது.திருடா திருடி படத்திற்குப் பிறகு சாயா சிங் பெரிய லெவலுக்கு வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தனுஷ் ராசி சாயா சிங் விஷயத்திலும் பலித்து விட்டது. அவருடைய முதல் ஜோடியான ஷெரீன் விஷயத்திலும் இப்படித்தான் பெரும் எதிர்பார்ப்புஎழுந்தது. ஆனால் ஷெரீன் எதிர்பாராத விதமாக பெரும் சரிவைச் சந்தித்தார். இப்போது விளம்பரப் படங்களில் கிளாமராக நடித்துபிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.அதே கதைதான் சாயா சிங் விஷயத்திலும் நடந்தது. திருடா திருடியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருக்கு ஒரு படமும் உருப்படியாகவரவில்லை. டப்பா படங்கள் ஒன்றிரண்டில் நடித்துக் கொண்டிருந்தார். இடையில் கன்னட மொழிப் படங்கள் சிலவற்றிலும் நடித்துப்பார்த்தார். தேறுவது போலத் தெரியவில்லை.இதனால் சற்றே டிராக் மாறலாம் என நினைத்து (அது குத்துப் பாட்டுக்கள் குதூகலமாக எக்காளமிட்டுக் கொண்டிருந்த காலம்!) விஜய்யுடன்மதுர படத்திலும், விக்ரமுடன் அருள் படத்திலும் ஒத்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்டார். பாட்டு பிரபலமானதே தவிர சாயா சிங்எடுபடவில்லை.ஒத்தப்பாட்டு வாய்ப்பும் இழந்து போன அவருக்கு விவேக்குடன் சொல்லி அடிப்பேன் படத்தில் ஜோடியாக (அதுவும் ரெண்டு ஹீரோயின்சப்ஜெக்ட்) நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்தப் படமும் ரொம்ப நாளாக தயாரிப்பில் இருக்கிறது. வருவது போலவும் தெரியவில்லை. இப்படியாக ஓடிக் கொண்டுள்ள சாயா சிங்கின் வாழ்க்கையில் லேசான மறுமலர்ச்சி வெளிச்சக் கீற்றென தெரிய ஆரம்பித்துள்ளது. அவரைநம்பி ஒரு படம் இப்போது உருவாகப் போகிறது. இதில் இரண்டு புதுமுகங்கள்தான் கதாநாயகர்கள்.உன்னால் ஒரு கவிதை என்று அப்படத்திற்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. வினோத் குமரன் (இவர்தான் படத் தயாரிப்பாளர்), பாலசூர்யா எனஇரண்டு புது ஹீரோக்கள் சாயாசிங்குடன் நடிக்கவுள்ளனர். காதல் புகழ் சுகுமார்தான் காமடி டிராக்கைக் கவனிக்கப் போகிறார். கூடவேபழைய ஹீரோயின்களான சீதா, இளவரசி ஆகியோரும் இருக்கிறார்கள்.கவி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் லேசு பாசாக கவர்ச்சியும் காட்ட உள்ளாராம் சாயா சிங். உன்னால் ஒரு கவிதை மூலமாவதுநமது வாழ்க்கையில் தென்றல் வீசுமா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளார் சாயா.

Posted By:
Subscribe to Oneindia Tamil

விரக்தியில் வீழ்ந்து கிடக்கிறார் சாயா சிங்.

நடிகர், நடிகர்களைப் பொருத்தவரை ஏதாவது ஒரு படம் அவர்களை தூக்கி விடும். ஆனால் சாயா சிங்குக்கோ ஒரே ஒரு பாட்டு பெரும்பெயரைப் பெற்றுத் தந்தது. மன்மத ராசா பாட்டுக்கு அவரும், தனுஷும் சேர்ந்து ஆடிய ஆட்டம் இன்னைக்கும் இளசுகளின் பேவரைட்பாட்டாக உள்ளது.

திருடா திருடி படத்திற்குப் பிறகு சாயா சிங் பெரிய லெவலுக்கு வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தனுஷ் ராசி சாயா சிங் விஷயத்திலும் பலித்து விட்டது. அவருடைய முதல் ஜோடியான ஷெரீன் விஷயத்திலும் இப்படித்தான் பெரும் எதிர்பார்ப்புஎழுந்தது. ஆனால் ஷெரீன் எதிர்பாராத விதமாக பெரும் சரிவைச் சந்தித்தார். இப்போது விளம்பரப் படங்களில் கிளாமராக நடித்துபிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.


அதே கதைதான் சாயா சிங் விஷயத்திலும் நடந்தது. திருடா திருடியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருக்கு ஒரு படமும் உருப்படியாகவரவில்லை. டப்பா படங்கள் ஒன்றிரண்டில் நடித்துக் கொண்டிருந்தார். இடையில் கன்னட மொழிப் படங்கள் சிலவற்றிலும் நடித்துப்பார்த்தார். தேறுவது போலத் தெரியவில்லை.

இதனால் சற்றே டிராக் மாறலாம் என நினைத்து (அது குத்துப் பாட்டுக்கள் குதூகலமாக எக்காளமிட்டுக் கொண்டிருந்த காலம்!) விஜய்யுடன்மதுர படத்திலும், விக்ரமுடன் அருள் படத்திலும் ஒத்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்டார். பாட்டு பிரபலமானதே தவிர சாயா சிங்எடுபடவில்லை.

ஒத்தப்பாட்டு வாய்ப்பும் இழந்து போன அவருக்கு விவேக்குடன் சொல்லி அடிப்பேன் படத்தில் ஜோடியாக (அதுவும் ரெண்டு ஹீரோயின்சப்ஜெக்ட்) நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்தப் படமும் ரொம்ப நாளாக தயாரிப்பில் இருக்கிறது. வருவது போலவும் தெரியவில்லை.


இப்படியாக ஓடிக் கொண்டுள்ள சாயா சிங்கின் வாழ்க்கையில் லேசான மறுமலர்ச்சி வெளிச்சக் கீற்றென தெரிய ஆரம்பித்துள்ளது. அவரைநம்பி ஒரு படம் இப்போது உருவாகப் போகிறது. இதில் இரண்டு புதுமுகங்கள்தான் கதாநாயகர்கள்.

உன்னால் ஒரு கவிதை என்று அப்படத்திற்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. வினோத் குமரன் (இவர்தான் படத் தயாரிப்பாளர்), பாலசூர்யா எனஇரண்டு புது ஹீரோக்கள் சாயாசிங்குடன் நடிக்கவுள்ளனர். காதல் புகழ் சுகுமார்தான் காமடி டிராக்கைக் கவனிக்கப் போகிறார். கூடவேபழைய ஹீரோயின்களான சீதா, இளவரசி ஆகியோரும் இருக்கிறார்கள்.

கவி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் லேசு பாசாக கவர்ச்சியும் காட்ட உள்ளாராம் சாயா சிங். உன்னால் ஒரு கவிதை மூலமாவதுநமது வாழ்க்கையில் தென்றல் வீசுமா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளார் சாயா.

Read more about: chaya singh in new movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil