»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெயசூர்யா படத்தில் அர்ஜூனுக்கு லைலா, சாயாசிங் என 2 ஜோடிகள்

தொடர்ந்து தோல்விப் படங்களே கொடுத்தாலும், அடுத்தடுத்து பட வாய்ப்புகளைப் பெறுவது எப்படி என்றுஅர்ஜூன் ஒரு புத்தகம் எழுதினால், மார்க்கெட் இல்லாமல் வீட்டிலிருக்கும் ராமராஜன், கார்த்திக் போன்றநடிகர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

முதல்வனுக்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படி அர்ஜூனுக்கு எந்தப் படமும் ஓடவில்லை. ஆனாலும் மனிதருக்குவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

தற்போது மீனாவுடன் ஜோடி சேர்ந்து அன்பு சகோதரன் என்ற படத்திலும்,லைலா - சாயாசிங்குடன் இணைந்து ஜெயசூர்யா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

லட்சுமி பிரியா கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் மனோஜ்குமார், செல்வி ஆகியோர் ஜெயசூர்யா படத்தைபிரம்மாண்டமாக தயாரிக்கிறார்கள். கொல்கத்தா, ஹைதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் படப்பிடிப்புவேகமாக நடந்து வருகிறது.

கொல்கத்தாவில் அம்மாநில அரசிடம் விசேஷ அனுமதி பெற்று போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஹெளராபாலத்தில் மிக முக்கியமான காட்சி ஒன்றைப் படம் பிடித்துள்ளார்கள். அர்ஜூன் எதிரிகளோடு மோதும்சண்டைக்காட்சி ஒன்றை விசாகப்பட்டினத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றை ஒரு வாரம் வாடகைக்கு எடுத்துபடமாக்கியுள்ளார்கள்.

தமிழகம் முழுவதும் கலவரம் நடப்பது போன்ற காட்சியை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான செட் போட்டுஎடுத்திருக்கிறார்கள்.

கொல்கத்தாவில் படப்பிடிப்பின்போது சாயாசிங் தவறிப்போய் ஆற்றில் விழுந்து விட்டாராம். அர்ஜூன் நீரில்பாய்ந்து சாயாசிங்கைக் கரை சேர்த்திருக்கிறார்.

அப்போது சாயாசிங், நீங்கள் காப்பாற்றாவிட்டால் கூட நான்பிழைத்திருப்பேன், எனக்கு மிக நன்றாக நீச்சல் தெரியும் என்று சொல்ல, அர்ஜூன் முகத்தில் லிட்டர் லிட்டராகஅசடு வழிந்திருக்கிறது.

ஒரு 420 பீடாவை போட்டா என்ற பாடலுக்கு லைலாவுடனும், தீக்குச்சி பெண்ணே பெண்ணே என்ற பாடலுக்குசாயாசிங்குடனும் அர்ஜூன் ஆடிப்பாடிய காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டன.

படத்துக்கு இசை தேவா. கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் மனோஜ்குமார். வடிவேலு, மனோரமா, பரவைமுனியம்மா, இளவரசு ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள். படம் மே மாதம் திரைக்கு வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil