நயன்தாராதான் அந்த வியாதியை பரப்பினார்.. காட்டமான சேகுவேரா.. என்ன இப்படி பேசுறாரு?
சென்னை: கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. அவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஒருபக்கம் குடும்பம், மறுபக்கம் நடிப்பு என பிஸியாக இருக்கும் நயன் சமீபகாலமாக ஒரு சர்ச்சையை சந்தித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
நயன்தாராவின் நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் ஜவான் திரைப்படமும், தமிழில் அன்னபூரணி படமும் வெளியானது. அடுத்ததாக அவரது நடிப்பில் ராக்காயி, மண்ணாங்கட்டி என வரிசையாக படங்கள் வரவிருக்கின்றன. இருந்தாலும் அவரது 75ஆவது படமான அன்னபூரணி படம் தோற்றதில் அவர் கொஞ்சம் அப்செட்டாகியிருக்கிறார் என்றும்; இனி வரும் படங்களை வைத்து அதற்கு மருந்திட்டுக்கொள்ள வேண்டுமென்பதில் நயன் தெளிவாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

திருமணம்: இதற்கிடையே அவர் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். பிறகு சில வருடங்கள் கழித்து இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு உயிர், உலக் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடும் அவர்; சினிமாவில் நடிப்பையும் குறைத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Nayanthara Beyond The Fairy Tale: இப்படி பிஸியாக இருக்கும் நயன் சமீபத்தில் ஒரு சர்ச்சையை சந்தித்தார். அதாவது அவரது வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள் மற்றும் தனது திருமணம் தொடர்பாக ஒரு ஆவணப் படம் உருவானது. கௌதம் மேனன் இயக்கியிருந்தார். நெட்ஃப்ளிக்ஸில் அந்த டாக்குமெண்டரி படம் நயனின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் 18ஆம் தேதி ஸ்ட்ரீமானது. அதுதான் கடந்த மாதம் முழுக்க டாக் ஆஃப் தி டவுனாக இருந்தது.
என்ன பிரச்னை: அந்த ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் ஃபுட்டேஜை பயன்படுத்த தனுஷிடம் விக்கியும், நயனும் அனுமதி கேட்க அவர் தர மறுத்துவிட்டார். அதனையடுத்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் நயன். அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட 37 நொடிகள்வரை அந்த ஃபுட்டேஜ் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனால் மேலும் டென்ஷனான தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க நாளை நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் திருமணம் நடக்கிறது. இதனையும் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்ய பிளான் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி; பிறகு அது இல்லை என்று தெரியவந்திருக்கிறது.
சேகுவேரா பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சேகுவேரா தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "முதலில் தனிப்பட்ட இருவரின் திருமணம் வியாபாரமானது நயன்தாராவால்தான். அவர்தான் இந்த வியாதியை பரப்பினார். நெட்ஃப்ளிக்ஸ் போன்ற பெரிய கார்ப்பரேட் கம்பெனியை திருமண வீடியோக்களை வாங்க வைத்தது நயன் மட்டும்தான். அந்த வியாதி இப்போது பல செலிபிரிட்டிகளிடம் இருக்கிறது. அது கண்டிப்பாக ஒரு வியாதிதான். வியாபார வியாதி அது" என்றார்.


Click it and Unblock the Notifications











