குறிப்பிட்ட சாதியினர் குறித்து வெறி பேச்சு.. ஆஜராக மீரா மிதுனுக்கு சைபர் க்ரைம் போலீசார் சம்மன்!

சென்னை: பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக நடிகை மீரா மிதுனுக்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.

சர்ச்சைகளும் சண்டைகளுக்கும் பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். மாடல் அழகியான மீரா மிதுன் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் செவுத் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றார் மீரா மிதுன்.

ஆனால் அதில் தனக்கு திருமணம் ஆனதை மறைத்ததாகவும் வயதை தவறாக குறிப்பிட்டதாகவும் கூறி அவரிடம் இருந்து அழகிப்பட்டம் திரும்பப் பெறப்பட்டது.

மீரா மிதுன் மீது மோசடி புகார்

மீரா மிதுன் மீது மோசடி புகார்

அதன் பிறகு அழகி போட்டி நடத்துவதாக கூறி பல இளம்பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக நடிகை மீரா மிதுன் மீது காவல்துறையில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. மீரா மிதுன் எட்டு தோட்டாக்கள் மற்றும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 - சேரன் மீது புகார்

பிக்பாஸ் சீசன் 3 - சேரன் மீது புகார்

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன். இதிலும் சக போட்டியாளர்களுடன் பிரச்சனை செய்து வந்த மீரா மிதுன் இயக்குநர் சேரன் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டை கூறி பரபரப்பை கிளப்பினார். தொடர்ந்து பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன்.

தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்

தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகும் அடங்காத மீரா மிதுன் தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள், கமல்ஹாசன், தமிழ் சினிமா மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் மீதும் குற்றச்சாட்டுக்களை கூறினார். மேலும் தமிழ் சினிமாக இயக்குநர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் குறித்தும் தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டு வந்தார்.

பிரதமர் மோடிக்கு புகார் - ஆபாச பேச்சு

பிரதமர் மோடிக்கு புகார் - ஆபாச பேச்சு

அதோடு தனக்கு என்ன பிரச்சனை என்றாலும் பிரதமர் மோடியின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு புகார் கூறி வந்தார். அரசியல் ஆசையிலும் உள்ள மீரா மிதுன் தான் தான் அடுத்த ஜெயலலிதா என்றும் கூறி வந்தார். நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா குறித்தும் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா குறித்தும் ஆபாசமாக பேசினார் மீரா மிதுன்.

மீரா மிதுன் வீடியோ - பெரும் சர்ச்சை

மீரா மிதுன் வீடியோ - பெரும் சர்ச்சை

இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் மீரா மிதுன். மீரா மிதுனை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை மீரா மிதுன். அந்த வகையில் சமீபத்தில் அவர் ஷேர் செய்த வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை கிளப்பியது.

பட்டியலின மக்கள் குறித்து சர்ச்சை வீடியோ

பட்டியலின மக்கள் குறித்து சர்ச்சை வீடியோ

அதாவது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் குறித்து பேசிய மீரா மிதுன் அந்தப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகளை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் என்று கூறியிருந்தார். மேலும் அவர்கள் குறித்து ஆபாசமாக பேசிய நடிகை மீரா மிதுன் அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால்தான் அவர்களை அனைவரும் தூற்றுகின்றனர் எனவும் தெரிவித்திருந்தார்.

மீரா மிதுன் மீது விசிக புகார்

மீரா மிதுன் மீது விசிக புகார்

அவரது இந்த வீடியோ பரபரப்பை கிளப்பிய நிலையில் அவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார்.

நேரில் ஆஜராக மீரா மிதுனுக்கு சம்மன்

நேரில் ஆஜராக மீரா மிதுனுக்கு சம்மன்

அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த புகாரில் நேரில் ஆஜராக நடிகை மீரா மிதுனுக்கு சென்னை சைபர் க்ரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X