»   »  மலையாளக் கரையில் சாயா சிங்!

மலையாளக் கரையில் சாயா சிங்!

Subscribe to Oneindia Tamil

தமிழ், தெலுங்கில் கைவிடப்பட்டவரான சாயா சிங் தனது அதிர்ஷ்டத்தைமலையாளத்தில் பரீட்சித்துப் பார்க்க அங்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

திருடா திருடி மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்திற்குள் நுழைந்த சாயா சிங்,அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுக்க முடியாமல் சுணங்கி, சுருண்டு போனார்.திருடா திருடியின் மூலம் உச்சத்துக்குப் போனாலும் அந்தப் படத்திற்குப் பிறகு சாயாசிங்கை ஹீரோயினாக பார்க்க முடியாமல் போய் விட்டது.

விஜய்யின் திருப்பாச்சி படத்தில் ஒரு சாமி ஆட்டம் ஆடி விட்டுப் போனார். இந்தநிலையில்தான் விவேக்குடன் சொல்லி அடிப்பேன் என்ற படத்தில் ஹீரோயின்வாய்ப்பு வந்தது. ஆனாலும் இது செகண்ட் ஹீரோயின் வாய்ப்புதான். இருந்தாலும்விடாமல் இதையும் ஏற்று நடித்தார். ஆனால் படம் வெளி வருவதாகவேதெரியவில்லை.

நொந்து நூலாகிப் போன சாயா சிங் தெலுங்கில் முயற்சித்துப் பார்த்து முடியாமல்நூடூல்ஸாகிப் போய் கன்னடத்திற்குத் தாவினார். அங்கு சொல்லிக் கொள்ளும்படியாகசில படங்கள் கிடைத்தது. அப்படியும் அங்கும் தேற முடியாவில்லை.

தேக்கமடைந்து கிடந்த சாயாசிங்கின் ஏக்கத்தை உணர்ந்தோ என்னவோ மலையாளப்படவுலகிலிருந்து சாயாவைத் தேடி ஒரு அழைப்பு வந்தது. சாயாவுக்கு மலையாளம்புதிதல்ல. ஏற்கனவே குஞ்சாக்கோ போபனுடன் (நம்ம ஊர் விஜய் மாதிரி அங்கேபோபன்!) முல்லவல்லியும் தேன்மாவும் என்ற படத்தில் நடித்துள்ளார் சாயா.

ஆனால் அந்தப் படம் பெரிய நஷ்டப் படமாகி விட்டது. இதனால் அதன் பின்னர்சாயாவை யாரும் அங்கே கூப்பிடவில்லை. இந்த நிலையில் இப்போது வியாசபாரதிஎன்ற நிறுவனம் தயாரிக்கவுள்ள அதுல்யன் என்ற படத்தில் நடிக்க சாயாவுக்குஅழைப்பு வந்துள்ளது.

இப்படத்தில் சாயா சிங்தான் ஹீரோயின். இருந்தாலும் நித்யா தாஸும் படத்தில்இருக்கிறார். சாய் குமார், சலீம் குமார், முன்னா, ரியாஸ் கான் ஆகியோரும் படத்தில்நடிக்கிறார்கள்.

இப்படத்தின் மூலம் மலையாளத்தில் தனது அதிர்ஷ்டத்தையும், சினிமாவில்எதிர்காலத்தையும் பரீட்சித்துப் பார்க்க தயாராகி வருகிறார் சாயா சிங்.

சாயா எதிர்காலம் சாயாமல் நிற்குமா?

Please Wait while comments are loading...