தொழிலதிபரை வளைத்துப்போட்ட அசின்..கோடிக்கணக்கில் சொத்து.. செய்யாறு பாலு சொன்ன தகவல்!
சென்னை: அழகான க்யூட்டான நடிகை என்று பெயர் எடுத்த அசின், தனது 15 வயதில் சினிமாவில் அறிமுகமாகி தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து 18 வயதில் தனது இரண்டாவது படமான அம்மா நன்னா ஓ தமிழா அம்மாயி என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இவரை புகழின் உச்சிக்கு உயர்த்தியது.
முதல் படத்திலேயே அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்ற அசின், 2004 ஆம் ஆண்டு வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து விஜய்யுடன் போக்கிரி, அஜித்துடன் வரலாறு, சூர்யாவுடன் கஜினி, வேல், கமல்ஹாசனுடன் தசாவதாரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து சூப்பர் ஹூட் படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த அசின், ராகுல் ஷர்மா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பலரின் கனவு நாயகியாக இருந்த அசின் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று சினிமா விமர்சகரான செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அழகான குடும்பம்: நடிகை அசின், அழகான பெண் குழந்தை, அன்பான கோடீஸ்வர கணவர் என சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கிறார். அசினின் கணவர் ராகுல் ஷர்மா மைக்ரோமேக்ஸ் இன்பர்மேட்டிக்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார். இவர்கள் இருவருக்கும் காதல் வந்ததே கஜினி படத்தில் வரும் காதல் கதைப்போல சுவாரசியமானது தான்.
ராகுல் ஷர்மா: நடிகை அசின் நண்பர் அக்சை என்பவர் தான், தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை, அசினுக்கு அறிமுகப்படுத்துகிறார். அசின் நடிகை என்பது ராகுல் ஷர்மாவிற்கு தெரியும், ஆனால், ராகுல் தொழில் அதிபர் என்பது அசினுக்கு தெரியாது. அதன் பிறகுதான் அசினுக்கு அவர் பெரிய தொழில் அதிபர் என்பதும், கோடீஸ்வரர் என்பதும் தெரிகிறது. கோடீஸ்வரராக இருந்தாலும், அவரிடம் இருக்கும் பணிவு, பண்பை பார்த்து ராகுல் ஷர்மாவை காதலித்தார் அசின். ராகுலும் காதலை ஏற்றுக்கொண்டதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பணக்கார பெண்: ராகுல் ஷர்மாவை போலவே அசினும் நல்ல பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் தான். கேரளாவில் அவருக்கு சொந்தமாக ஒரு அணையே இருக்கிறது என்று அசினின் அப்பா பல பேட்டியில் சொல்லி இருக்கிறார். பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல், கதையை நன்றாக தேர்வு செய்தே நடித்தார். பல டாப் நடிகர்களுடன் நடித்துக்கொண்டு இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகிய அசின், தனது கணவரின் கம்பெனியை நிர்வாகம் செய்து வருகிறார். குழந்தை பிறந்த பின் குழந்தை, கணவன் என அழகான இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்த்து வருகிறார் என்று செய்யாறு பாலு தனது பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











