நியாயம் கேட்கும் சமந்தா கணவரின் முதல் மனைவி.. விவாகரத்துக்கு முன்னரே ராஜுடன் காதலா?.. பிரபலம் ஓபன் டாக்

சென்னை: நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா சில காலம் சிங்கிளாக இருந்துவிட்டு இப்போது இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். இரண்டு பேரின் திருமணமும் சில நாட்களுக்கு முன்பு கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்தது. ராஜும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்திருமணம் பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.

நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. கடந்த 2017ஆம் ஆண்டு அவர்களுக்கு கோவாவில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஆனால் சில வருடங்களிலேயே அதாவது 2021ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அவர்கள் பிரிந்ததற்கு சமந்தா திருமணத்துக்கு பின்பும் நடித்ததுதான் காரணம் என்று பேசப்பட்டது.

ராஜுடன் பழக்கம் ஏற்பட்டது: இதற்கிடையே நாக சைதன்யாவுடன் சேர்ந்து இருந்தபோதே தி ஃபேமிலி மேன் 2வில் நடித்தார் சமந்தா. அதனை ராஜ் நிடிமோருவும் டிகேவும் இயக்கியிருந்தார்கள். சைதன்யாவுடனான பிரிவுக்கு பிறகு ராஜுவுடன் சமந்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இரண்டு பேரும் பொதுவெளிகளில் ஜோடியாக சுற்றி திரிந்துவந்தனர்.

Cheyyaru balu Talks about Samantha Husband Raj Nidimoru Ex Wife Shyamili Reaction after 2nd Marriage
Photo Credit:

இரண்டாவது திருமணம்: இதற்கிடையே ஷ்யாமிலி என்பவரை திருமணம் செய்திருந்தார் ராஜ் நிடிமோரு. அவர்கள் இரண்டு பேருக்கும் ஒத்து வராததால் கடந்த 2022ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். சூழல் இப்படி இருக்க தீவிரமாக காதலித்துவந்த சமந்தாவும், ராஜ் நிடிமோருவும் சில நாட்களுக்கு முன்பு கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். இப்போது அந்த ஜோடி ஹனிமூனில் இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் மனைவியின் பதிவு: இது ஒருபக்கம் இருக்க சமந்தா - ராஜ் திருமணம் ஷ்யாமிலிக்கு மன உளைச்சலை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கு முதல் நாள் அவர் போட்டிருந்த இன்ஸ்டா போஸ்ட் ஒன்றில், "விரக்தியானவர்கள் விரக்தியான செயலை செய்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் அடுத்ததாக இன்னொரு போஸ்ட்டில், "உறக்கமற்ற இரவுகளில் தவித்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி" என நீண்ட போஸ்ட் ஒன்றையும் போட்டிருந்தார்.

செய்யாறு பாலு வீடியோ: கண்டிப்பாக இந்தத் திருமணத்துக்கு மனதுக்குள் ஷ்யாமிலி வாழ்த்து தெரிவித்திருக்கமாட்டார் என்றுதான் பலரும் கருதுகிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "ராஜும் அவரது முதல் மனைவியும் மியூச்சுவலாக டைவர்ஸ் ஆனவர்கள்தான். அவர் இப்போது என்ன சொல்கிறார் என்றால், 'இரண்டு மூன்று வருடத்துக்கு முன்னரே இவர்கள் லிவிங் டூ கெதரில் இருந்தது தெரியும். சுற்றிக்கொண்டிருந்தார்கள். நான் பிரிந்துவிட்டேன்.

இந்த உலகம் என்ன சொன்னது?: எனக்கு விவாகரத்து ஆவதற்கு முன்பே சமந்தா ராஜுடன் சுற்றிக்கொண்டிருந்தார். சோபிதாவுடன் நாக சைதன்யா சுற்றிக்கொண்டிருந்தபோது இதெல்லாம் அடுக்குமா என்று இந்த உலகம் சொன்னது. எனது கணவருடன் சமந்தா சுற்றியதற்கு என்ன சொல்லப்போகிறார்கள் என கேட்கிறார் என்றார். மேலும் பேசிய அவர், 'நாக சைதன்யா விவாகரத்தில் சமந்தாவுக்கு ஆதரவு அலை இருந்தது. இப்போது எதிர்ப்பு அலையாக மாறி அவரை கடுமையான சொற்களை கொண்டு பேசும்படி ஆகிவிட்டது" என்றார்.

More from Filmibeat

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X