சமந்தா படாத பாடு இல்லை.. எவ்வளவு சந்திச்சாங்க தெரியுமா?.. சின்மயி ஓபன் டாக்

சென்னை: சமந்தா நடிப்பில் கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸ் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது. அதேசமயம் அவரது நடிப்பு அட்டகாசமாக இருந்தது என்று ரசிகர்கள் ஓபனாக கூறினார்கள். மையோசிடிஸ் நோயிலிருந்து மீண்டிருக்கும் அவர் மீண்டும் பழையபடி நடிக்க ஆரம்பித்திருப்பது அவரது ரசிகர்களிடையே உச்சக்கட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அவர் குறித்து பின்னணி பாடகி சின்மயி பேசியிருக்கும் வீடியோ திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்த சமந்தா அதற்கு பிறகு ஹீரோயினாக வளர்ந்தார். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அவர் தனது அபாரமான திறமையால் குறுகிய காலத்திலேயே தமிழில் முன்னணி நடிகை என்ற இடத்தை அடைந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அவர் தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். அங்கும் தனது கொடியை பறக்க வைத்த அவர் நாக சைதன்யாவை காதலித்தார்.

samantha chinmayi naga chaitanya

பிரிந்த சமந்தா: நாக சைதன்யா - சமந்தா காதலுக்கு நாகார்ஜுனா வீட்டில் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து இரண்டு பேரும் 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் திருமணத்துக்கு பிறகு சமந்தா தொடர்ந்து நடித்தார். அதற்கு சைதன்யாவின் ஆதரவும் இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் நாக சைதன்யாவின் குடும்பம் சமந்தா நடிப்பதை விரும்பவில்லை என்று தெரிகிறது. ஆனால் அவர்களது விருப்பத்துக்கு மாறாக சாம் தொடர்ந்து நடித்தார். இதனால் திருமண உறவில் ஏற்பட்ட விரிசல் நாளடைவில் பெரிதாகி விவாகரத்தில் முடிந்தது.

மையோசிடிஸ் நோய்: திருமண உறவிலிருந்து வெளியே வந்த அவர் புஷ்பா படத்தி ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதற்கு பிறகு அவரது கிராஃப் உச்சம் சென்றது. இருந்தாலும் அந்த சமயத்தில் மையோசிடிஸ் என்னும் தோல் நோய் அவருக்கு வந்தது. அதன் காரணமாக சினிமாவிலிருந்து விலகி சிகிச்சை எடுத்துக்கொண்டார். விரைவில் சமந்தா உடலளவிலும், மனதளவிலும் தேறி பழைய ஃபார்மில் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள்.

மீண்டும் ஆரம்பித்த சமந்தா: ஒருவழியாக அந்த நோயிலிருந்து மீண்ட அவர் சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. அதனையடுத்து குட்டி பிரேக் எடுத்துக்கொண்ட அவர் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ராஜ்&டிகே இயக்கத்தில் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்தார். அது சுமாரான வரவேற்பை பெற்றாலும் சமந்தாவின் நடிப்புக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சின்மயி பேட்டி: இந்நிலையில் சமந்தா குறித்து பின்னணி பாடகி சின்மயி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "சமந்தா படாத பாடு இல்லை. உடலளவிலும், மனதளவிலும் அவர் அவ்வளவு பாடுபட்டார். எத்தனையோ தாக்குதல்களும், விமர்சனங்களும் அவர் மீது சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டன. அவர் மிகவும் திறமையானவர். யாரின் வழிகாட்டுதாலும் இல்லாமல் கடுமையாக உழைத்து முன்னேறி இருக்கிறார். பலவற்றையும் தாண்டி அவர் பலருக்கு ரோல் மாடலாக இருக்கிறார். எந்தவிதத்திலும் அவர் சளைத்தவர் இல்லை. இப்போதும் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X