இந்த வீடியோவை பார்த்தால் ரஜினியே குபீர்னு சிரித்துவிடுவார்
சென்னை: தன் பாடலை வைத்து போடப்பட்டுள்ள மீம்ஸை பார்த்து பாராட்டியுள்ளார் பாடகி சின்மயி.
பாடகி சின்மயி ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். பாராட்டினால் நன்றி தெரிவிப்பார், ஓவராக பேசினால் நறுக்கென்று பதில் அளிப்பார். இந்நிலையில் அவர் ரஜினியின் கோச்சடையான் படத்திற்காக பாடிய இதயம் நழுவி பாடலை வைத்து மீம்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

வீடியோவில் வடிவேலுவும், சிங்கமுத்துவும் ரவுசு செய்வது அந்த பாடலுக்கு நச்சென்று பொருந்தியுள்ளது. இதை பார்த்த சின்மயி மீம்ஸ் வீடியோவை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என்ன ஒரு எடிட், என் கோச்சடையான் பாடலுக்கு இப்படி ஒரு எடிட் இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











